சேலம்: சேலத்தில், மாநகர் மாவட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., சக்திவேல், முன்னாள் எம்.எல்.ஏ., செல்வராசு, முன்னாள் மேயர் சவுண்டப்பன், முன்னாள் துணை மேயர் நடேசன், பொருளாளர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தனர். சேலம் மாநகர் மாவட்ட செயலர், எம்.எல்.ஏ., வெங்கடாஜலம் பேசியதாவது: வரும், 5ல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், நான்காம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நான்கு ரோட்டில் இருந்து, ஊர்வலமாக சென்று, அண்ணா பூங்கா மணி மண்டபத்தில் உள்ள, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இதில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில், 2021 சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளராக பழனிசாமி அறிவிப்பு, அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத மருத்துவ படிப்பு ஒதுக்கியது உள்ளிட்டவைக்கு, நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பகுதி செயலர் தியாகராஜன், பாலு, சரவணன், முருகன், யாதவமூர்த்தி, ஜெகதீஷ்குமார், சண்முகம், பாண்டியன், ஜெ., பேரவை செயலர் சரவணமணி, கூட்டுறவு வங்கி தலைவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர், எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலர், முன்னாள் கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE