பொது செய்தி

தமிழ்நாடு

வீரபாண்டியில் விவசாயிகளுக்கு உதவ உழவர் - அலுவலர் தொடர்பு திட்டம்

Added : டிச 03, 2020
Share
Advertisement
வீரபாண்டி: வேளாண், தோட்டக்கலைத்துறையின் நவீன சாகுபடி தொழில்நுட்பம், மானிய உதவி குறித்து, விவசாயிகள் நேரடியாக தெரிந்து கொள்ள, உழவர் - அலுவலர் தொடர்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, வீரபாண்டி வட்டார வேளாண் உதவி இயக்குனர் கிரிஜா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு சார்பில், 2020 - 2021 நிதிநிலை அறிக்கையில், வேளாண், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், நேரடியாக விவசாயிகளின்

வீரபாண்டி: வேளாண், தோட்டக்கலைத்துறையின் நவீன சாகுபடி தொழில்நுட்பம், மானிய உதவி குறித்து, விவசாயிகள் நேரடியாக தெரிந்து கொள்ள, உழவர் - அலுவலர் தொடர்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து, வீரபாண்டி வட்டார வேளாண் உதவி இயக்குனர் கிரிஜா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு சார்பில், 2020 - 2021 நிதிநிலை அறிக்கையில், வேளாண், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், நேரடியாக விவசாயிகளின் விளைநிலங்களுக்கு சென்று ஆலோசனைகள் வழங்க, உழவர் - அலுவலர் தொடர்பு திட்டம் தொடங்கப்படும் என அறிவித்தது. இதைத்தொடர்ந்து, வீரபாண்டி வட்டாரத்தில் உள்ள ஊராட்சிகளில், 10 முன்னோடி விவசாயி, ஆதி திராவிடர், பழங்குடியின விவசாயி இருவர் என, 12 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு நவீன சாகுபடி தொழில்நுட்பம், மானிய திட்டம் குறித்து, உரிய கால இடைவெளியில் பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது. பயிற்சி பெற்ற விவசாயிகள், அலுவலர்களுக்கும், மற்ற விவசாயிகளுக்கும் பாலமாக இருப்பர். வேளாண், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், வாரத்தில் நான்கு நாள், விவசாயிகளின் விளைநிலங்களுக்கு சென்று, அவர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வது, தொழில்நுட்ப உதவி செய்வது, மானியம் பெற உதவுதல், வானிலை முன்னறிவிப்பு, பயிர் பாதுகாப்பு, கண்டுணர்வு சுற்றுலா பயண திட்டங்கள், பயனாளிகள் தேர்வு ஆகியவற்றை செய்வர். வட்டார விரிவாக்க குழுக்கள், வேளாண், தோட்டக்கலைத்துறை அலுவலர்களுடன் இணைந்து, ஒரு மாத பயண அட்டவணையை தயாரித்து, விவசாயிகளை நேரடியாக சந்தித்து தகுந்த ஆலோசனை வழங்குவர். இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X