இடைப்பாடி: மேட்டூர் அணை உபரிநீரை, சேலம் மாவட்டத்தில் உள்ள, வறண்ட, 100 ஏரிகளுக்கு கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், ஓமலூர் வட்டத்தில் உள்ள பாப்பம்பாடி புது ஏரி, கஸ்பா ஏரி, இடைப்பாடி வட்டத்தில் கொங்கணாபுரம் புது ஏரி, அம்மாபாளையம், கோரணம்பட்டி, அய்யம்பாளையம், கோரகுட்டப்பட்டி, கொல்லப்பட்டி ஏரிகள், சங்ககிரி வட்டத்தில், ஏகாபுரம் கஸ்பா, கன்னந்தேரி, சின்னேரி, வளையசெட்டிப்பட்டி குட்டை ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வரும்படி, ஏரிகளை சீரமைக்க, தமிழக அரசு, 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. அதன் தொடக்க விழா, நேற்று நடந்தது. மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அதில், கொங்கணாபுரம் ஒன்றிய குழு தலைவர் மணி, பணியை தொடங்கி வைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE