அரூர்: அரூர் அடுத்த தீர்த்தமலையில், தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள, ராமர், குமாரர் உள்ளிட்ட தீர்த்தங்களில் புனித நீராட, நாள்?தோறும், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். சில மாதங்களுக்கு முன், பெய்த கனமழையால், பாறைகள் சரிந்து விழுந்ததில், கல்யாணராமர் சன்னதில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை அண்ணா பல்கலைக்கழக சுரங்கவியல் துறை பேராசிரியர் பாலமாதேஸ்வரன் தலைமையிலான குழுவினர் மற்றும் சுரங்கவியல் ஆலோசகர் ரமேஷ்சந்திரன் கர்க் ஆகியோர், தீர்த்தங்கள் அமைந்துள்ள மலைப்பகுதியை நேற்று ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, அரூர் சப் - கலெக்டர் பிரதாப், தர்மபுரி, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE