பொது செய்தி

தமிழ்நாடு

ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை முகாம்

Added : டிச 03, 2020
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், நாளை (டிச.,4) ஆண்களுக்கான சிறப்பு நவீன கருத்தடை சிகிச்சை முகாம் நடக்கிறது என, மருத்துவம், ஊரக நலப்பணிகள் துணை இயக்குனர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: பெண்களின் சுமையை குறைக்க, ஆண்களும் முன்வர வேண்டும் என்ற நோக்கில், வாசக்டமி எனப்படும் ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், நாளை (டிச.,4) ஆண்களுக்கான சிறப்பு நவீன கருத்தடை சிகிச்சை முகாம் நடக்கிறது என, மருத்துவம், ஊரக நலப்பணிகள் துணை இயக்குனர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: பெண்களின் சுமையை குறைக்க, ஆண்களும் முன்வர வேண்டும் என்ற நோக்கில், வாசக்டமி எனப்படும் ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நாளை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பையர்நத்தம் மருத்துவமனையில் நடக்கிறது. குடும்பத்தை, அளவோடு வைத்துக்கொள்ள விரும்பும் ஆண்கள், இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். கருத்தடை செய்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும். ஊக்கத்தொகையாக தலா, 1,100 ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X