தர்மபுரி: ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொண்டைக்கடலையுடன், பிற ரேஷன் பொருட்கள், ஒரே தவணையில், டோக்கனில் குறிப்பிட்ட தேதிகளில் வழங்கப்படும் என, மாவட்ட கலெக்டர் கார்த்திகா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்திலுள்ள ரேஷன்கார்டுதாரர்களுக்கு, இந்த மாதத்துக்கான ரேஷன் பொருட்கள் வழங்கும் தேதி குறித்து, டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி, கஏஏ, அஅஙு ரேஷன்கார்டுதாரர்களுக்கு துவரம் பருப்புக்கு பதில், 5 கிலோ கொண்டைக்கடலை வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு, ரேஷன்கார்டில் உள்ள அளவின் படி, பிற ரேஷன் பொருட்களும், ஒரே தவணையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Nகஏஙு ரேஷன்கார்டுதாரர்களுக்கு, ஒரு கிலோ துவரம் பருப்பு விலையின்றியும், இதர பொருட்கள் கார்டில் உள்ளபடியும் வழங்கப்படும். ரேஷன் கடைகளுக்கு, பொருட்கள் வாங்க வரும் மக்கள், ஒரு மீட்டர் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன், முக கவசம் அணிந்து வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE