தர்மபுரி: தர்மபுரி அடுத்த, இருமத்தூர் ஆற்றங்கரையில், அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இருமத்தூர் ஆற்றங்கரையில், அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடக மாநிலம், நந்தி மலையில் தென்பெண்ணை ஆறு உருவாகி, ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, அரூர், திருவண்ணாமலை, கடலூர் வழியாக பாய்ந்து வங்க்க கடலில் கலக்கிறது. இந்நிலையில், இருமத்தூர் வழியாக பாயும் தென்பெண்ணையாற்றின் கரையில், பிரசித்தி பெற்ற மாதேஸ்வரன் கோவில் உள்ளது. இந்த ஆற்றில், முன்னோர்களுக்கு திதி கொடுக்கவும், இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்யவும், இந்த ஆற்றுக்கு நாள்தோறும், ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால், இந்த ஆற்றங்கரையில் குடிநீர், குளியலறை, பெண்கள் உடை மாற்றும் அறை உள்ளிட்ட, எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. மேலும், திதி கொடுக்க வருபவர்கள் வீசி செல்லும் துணிகளும், இந்த ஆற்றில் தேங்கி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இரண்டு மாவட்ட எல்லையில் உள்ள ஆற்றை, எந்த மாவட்ட நிர்வாகமும் இதுவரை கண்டுகொள்ளவில்லை. எனவே, பொதுமக்களின் நலன்கருதி, இந்த ஆற்றங்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE