ஓசூர்: கெலமங்கலத்தில், மண் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஸ்டேஷன் எஸ்.ஐ., நாகமணி தலைமையிலான போலீசார், கெலமங்கலம் ஜீவா நகரிலுள்ள காளி கோவில் அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ஜீவா நகர் புறம்போக்கு நிலத்திலிருந்து, மண் கடத்தி செல்வது தெரிந்தது. ஒரு யூனிட் மண்ணுடன் டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், கெலமங்கலம் வாணியர் தெருவை சேர்ந்த டிராக்டர் உரிமையாளர் சிவசங்கர் மற்றும் டிரைவர் ராமராஜ் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE