கிருஷ்ணகிரி: வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணியை, மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு புதிதாக வந்துள்ள விவிபேட், 1300, கன்ட்ரோல் யூனிட், 560 என மொத்தம், 1,860 வாக்கு இயந்திரங்களின் முதல் நிலை சரிப்பார்ப்பு பணிகளை, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேற்று நேரில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு பெட்டக அறையிலுள்ள இயந்திரங்கள், முதல் நிலை சரிபார்க்கும் பணி, பெல் நிறுவன தொழில்நுட்ப அலுவலர்கள் மேற்கொண்டனர். இதை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், கலெக்டர் துவக்கி வைத்து பார்வையிட்டார். இதில், ஆர்.டி.ஓ., கற்பகவள்ளி, தாசில்தார் வெங்கடேசன், மாவட்ட கலெக்டர் அலுவலக தேர்தல் தாசில்தார் பாலசுந்தரம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE