கிருஷ்ணகிரி: கிருஷ்ணகி, காட்டிநாயனப்பள்ளி பஞ்., போகனப்பள்ளி ஆதியன் நகரில், கற்போம், எழுதுவோம் இயக்க மையம் துவக்க விழா நேற்று நடந்தது. சி.இ.ஓ., முருகன் தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் மோகன், சரவணன், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் நாராயணா, வட்டார கல்வி அலுவலர் மரியரோஸ், மேற்பார்வையாளர் கோதண்டபாணி ஆகியோர் பங்கேற்றனர். இதில் கற்போர், தன்னார்வலர்களுக்கு புத்தகங்களை வழங்கி, சி.இ.ஓ., பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, 580 மையங்களில் கற்போம், எழுதுவோம் துவக்கப்பட்டு, தன்னார்வலர்கள் மூலம், 11 ஆயிரத்து, 488 கற்போர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பொதுமக்களுக்கு எழுத்தறிவின் அவசியத்தை உணர்த்தும் வகையில் ஊக்கமளித்து, வங்கி, அஞ்சல் நிலையம், சுய உதவிக்குழு ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து அறியச்செய்ய வேண்டும். தன்னம்பிக்கை வளர கற்பது அவசியம். இவ்வாறு அவர் கூறினார். அங்கிருந்த மக்கள் தங்களது குழந்தைகள் ஜாதிச்சான்றிதழ் இல்லாமல், கல்வியை தொடர முடியாத நிலை உள்ளதாக தெரிவித்தனர். இது குறித்து, கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுப்பதாக, சி.இ.ஓ., உறுதியளித்தார். நிகழ்ச்சியில், பொறியாளர் சரவணன், காட்டிநாயனப்பள்ளி தலைமையாசிரியர், ஆண்ட்ரி மரிய ஜூலி, உதவி ஆசிரியர் என்ட்ரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE