திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகேயுள்ள சாத்தனூர் அணை, 94 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செய்யப்பட உள்ள புனரமைப்பு பணிகள் குறித்து, கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணை, உலக வங்கி நிதியில், 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட உள்ளது. இதில், அணையின் நீர்வழிந்தோடும் பகுதியிலுள்ள, ஒன்பது கதவுகள் மற்றும் உபரிநீர் போக்கியில் உள்ள, 11 கதவுகளை மாற்றுதல், பணியாளர்களுக்கு புதிய குடியிருப்பு கட்டுதல், கூடுதல் உபரிநீர் போக்கி முன்புறமுள்ள மண்மேடுகள் அகற்றுதல், பிக்கப் அணையின் அணுகு சாலை மேம்படுத்துதல் மற்றும் மிகைநீர் போக்கி கட்டுமானத்துக்கு வனத்துறையிடமிருந்து தடையில்லா சான்று பெறுவது குறித்து, கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் நேற்று ஆய்வு செய்தார். மேலும், சட்டசபையில், 110 விதியில் அறிவிக்கப்பட்ட, சாத்தனூர் அணை, பூங்கா மறு சீரமைப்பு மற்றும் பூங்கா உட்கட்டமைப்பு பணிகளுக்காக, நான்கு கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, அரசு உத்தரவு கிடைத்தவுடன் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்தும், கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE