சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெள்ளத்தில் மூழ்கி இரட்டை சகோதரர்கள் பலி

Added : டிச 03, 2020
Share
Advertisement
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், சீக்கராஜபுரம் அடுத்த பல்லவன் நகரை சேர்ந்தவர், கிஷோர், 50; கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்; அவரது மனைவி, லலிதா, 48; இவர்களுக்கு, இரட்டை பிறவிகளான நரேஷ், 15, நவீன், 15, மகன்கள் இருந்தனர். இருவரும், சிப்காட் பெல்லில், 10ம் வகுப்பு படித்து வந்தனர். மேலும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரலட்சுமி, 10 என்ற மகளும் உள்ளார். இவர்கள் வீட்டருகே உள்ள

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், சீக்கராஜபுரம் அடுத்த பல்லவன் நகரை சேர்ந்தவர், கிஷோர், 50; கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்; அவரது மனைவி, லலிதா, 48; இவர்களுக்கு, இரட்டை பிறவிகளான நரேஷ், 15, நவீன், 15, மகன்கள் இருந்தனர். இருவரும், சிப்காட் பெல்லில், 10ம் வகுப்பு படித்து வந்தனர். மேலும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரலட்சுமி, 10 என்ற மகளும் உள்ளார். இவர்கள் வீட்டருகே உள்ள பொன்னையாற்றில், நேற்று வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. இதை காணும் ஆசையில் நேற்று மாலை, 4:00 மணிக்கு, லலிதா, நரேஷ், நவீன், வரலட்சுமி ஆகியோர், சீக்கராஜபுரம் பொன்னையாற்று கரையோரம் நின்று, வெள்ளத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, கால் இடறியதால் நவீன் ஆற்றில் விழுந்தார். அவரை காப்பாற்ற, நரேஷ் ஆற்றில் குதித்தார். இதில், இருவரும் ஆற்று வெள்ளத்தில் மூழ்கினர். தகவலின்படி வந்த, ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேரம் போராடி, இருவரது உடல்களையும் மீட்டனர். சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X