பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளை நோயாளிகளாக்கி விட்டார்: முதல்வர் பழனிசாமி மீது ஸ்டாலின் சாடல்

Added : டிச 03, 2020
Share
Advertisement
ஓசூர்: ''தமிழக முதல்வர் பழனிசாமி, விவசாயிகளை நோயாளிகளாக்கி விட்டார்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.கிருஷ்ணகிரி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டத்தில், தி.மு.க., சார்பில், 'தமிழகம் மீட்போம்' பொதுக்கூட்டம் நடந்தது. இதில், காணொலி காட்சி வாயிலாக பங்கேற்ற, அக்கட்சி தலைவர் ஸ்டாலின், கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு, பொற்கிழி வழங்கினார்.தொடர்ந்து அவர் பேசியதாவது:

ஓசூர்: ''தமிழக முதல்வர் பழனிசாமி, விவசாயிகளை நோயாளிகளாக்கி விட்டார்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.
கிருஷ்ணகிரி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டத்தில், தி.மு.க., சார்பில், 'தமிழகம் மீட்போம்' பொதுக்கூட்டம் நடந்தது. இதில், காணொலி காட்சி வாயிலாக பங்கேற்ற, அக்கட்சி தலைவர் ஸ்டாலின், கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு, பொற்கிழி வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது: முதல்வர் பழனிசாமி, என்னை விவசாயியா என கேட்கிறார். நானும் விவசாயி இல்லை. கருணாநிதியும் விவசாயி இல்லை. ஆனால், கருணாநிதி முதல்வராக இருந்தபோது, விவசாயிகளுக்காக, பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. கருணாநிதி விவசாயிகளை, 'பசி பிணி மருத்துவர்' என கூறினார். ஆனால், முதல்வர் பழனிசாமி, விவசாயிகளை நோயாளிகளாக்கி விட்டார்.


காவிரி டெல்டா விவசாயிகளுக்கு துரோகம், எட்டு வழிச்சாலையில் துரோகம், ஈரோட்டில் மின்கோபுர துரோகம், ஹைட்ரோ கார்பன் துரோகம் ஆகியவற்றை செய்து விட்டு, வெட்கம் இல்லாமல் முதல்வர் பழனிசாமி, தன்னை விவசாயி என கூறுகிறார். அவர் பச்சை துண்டு பழனிசாமி அல்ல. பச்சை துரோக பழனிசாமி. டெல்லியில், வேளாண் மசோதாக்களுக்கு எதிராக, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக, தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ஆலோசனை நடத்தி, விரைவில், போராட்ட களம் காண உள்ளோம். வேளாண்மையை அழிக்கும், வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வைப்போம். இந்த அரசுக்கு, கரன்சி குறித்துத்தான் கவலை. மக்கள் குறித்து கவலை இல்லை. அ.தி.மு.க., டெண்டர் ஆட்சி. தமிழக மக்களுக்கு இது தண்டம் ஆட்சி. இவ்வாறு, அவர் பேசினார். கூட்டத்தில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பிரகாஷ், சத்யா, முருகன், செங்குட்டுவன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X