பொது செய்தி

தமிழ்நாடு

நடராஜன் விளையாடியதை கொண்டாடிய சின்னப்பம்பட்டி; மகனின் வெற்றிக்கு பிரார்த்திக்க பழனிக்கு சென்ற தந்தை

Added : டிச 03, 2020
Share
Advertisement
சேலம்: சேலம் கிரிக்கெட் வீரர் நடராஜன், முதல் போட்டியிலேயே இரண்டு விக்கெட் வீழ்த்தியதை, சின்னப்பம்பட்டியில், அவரது குடும்பத்தினர் கொண்டாட்டமாய் பார்த்து ரசித்தனர்.சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன், கடந்த ஐ.பி.எல்., போட்டிகளில், தன் திறனை வெளிப்படுத்தியதால், இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்தியா -ஆஸ்திரேலியா கிரிக்கெட்

சேலம்: சேலம் கிரிக்கெட் வீரர் நடராஜன், முதல் போட்டியிலேயே இரண்டு விக்கெட் வீழ்த்தியதை, சின்னப்பம்பட்டியில், அவரது குடும்பத்தினர் கொண்டாட்டமாய் பார்த்து ரசித்தனர்.
சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன், கடந்த ஐ.பி.எல்., போட்டிகளில், தன் திறனை வெளிப்படுத்தியதால், இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்தியா -ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட்ட அவர், முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. இரு போட்டிகளிலும் இந்தியா தோல்வியடைந்திருந்த இக்கட்டான சூழலில், நேற்று மூன்றாவது ஒரு நாள் போட்டி நடந்தது. இதில், முதல் முறையாக, சர்வதேச போட்டியில் நடராஜன் பங்கேற்றார். இதையடுத்து, போட்டியை கண்டு ரசிக்க, அவரது வீட்டில், குடும்பத்தினருடன் உறவினர்களும், நண்பர்களும் குவிந்தனர். 'டிவி'யில் பேட்டியை கண்டனர். மகன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அவரது தந்தை தங்கராசு, பழனி முருகன் கோவிலுக்கு சென்றிருந்தார். நடராஜன் தாய் சாந்தா, தம்பி சக்தி, தங்கைகள் தமிழரசி, மேகலா ஆகியோர், அனைவருடன் சேர்ந்து கண்டு ரசித்தனர். நடராஜன் முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்ததால், உற்சாகம் கரை புரண்டு ஓடியது. பலரும் ஆனந்த கண்ணீர் வடித்தனர். மேலும் திருஷ்டி கழிக்க, 'டிவி'யில் ஆரத்தி எடுத்தனர்.

இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறியதாவது: நடராஜனின் நீண்டநாள் கனவு, நேற்று நிஜமானது. இரண்டு ஒரு நாள் போட்டியில் பங்கேற்காத நிலையில், நேற்றைய போட்டியில் பங்கேற்றதே எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. அதிலும், முதல் ஓவரில் விக்கெட் எடுத்ததும் எங்களால் மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. இரண்டு போட்டிகளில் வெற்றி பெறாத நிலையில், இந்த போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றதும் மிகுந்த மகிழ்ச்சி. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X