பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.32.50 லட்சம் வாடகை பாக்கி: கோ -ஆப்டெக்ஸ்க்கு நோட்டீஸ்

Added : டிச 03, 2020
Share
Advertisement
வேலூர்: வேலூரில், 32.50 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்த, 'தீபம் கோ ஆப்டெக்ஸ்' விற்பனை நிலையத்துக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான, சாரதி மாளிகை தரைதளத்திலுள்ள, 'தீபம் கோ ஆப்டெக்ஸ்' விற்பனை நிலையம், 2015 முதல், 2020 வரை, 32 லட்சத்து, 52 ஆயிரத்து, 529 ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளனர். இதனால், 15 நாளில் வாடகை பாக்கியை செலுத்தா விடில், கடை ஜப்தி

வேலூர்: வேலூரில், 32.50 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்த, 'தீபம் கோ ஆப்டெக்ஸ்' விற்பனை நிலையத்துக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான, சாரதி மாளிகை தரைதளத்திலுள்ள, 'தீபம் கோ ஆப்டெக்ஸ்' விற்பனை நிலையம், 2015 முதல், 2020 வரை, 32 லட்சத்து, 52 ஆயிரத்து, 529 ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளனர். இதனால், 15 நாளில் வாடகை பாக்கியை செலுத்தா விடில், கடை ஜப்தி செய்யப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று, அந்த விற்பனை நிலையத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இது குறித்து, 'தீபம் கோ ஆப்டெக்ஸ்' அதிகாரிகளை கேட்டபோது, 'கடந்த மார்ச் மாதம், வேலூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு, துணிகள் வாங்கிய வகையில், 12 லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ளனர். பலமுறை கேட்டும் கொடுக்காதால், நாங்கள் மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பினோம். இதனால் அவர்கள், எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்,' என்றனர். இந்நிலையில், சொத்து வரி, குடிநீர் கட்டணம் என, 20 கோடி ரூபாய்க்கு வரி பாக்கி உள்ளதை வசூலிக்க, 40 ஆயிரம் பேருக்கு, வேலூர் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X