ஜாதி அடிப்படையிலான குடியிருப்புபகுதி பெயர்களை நீக்க மஹா., அரசு ஒப்புதல்

Updated : டிச 03, 2020 | Added : டிச 03, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
மும்பை: மஹாராஷ்டிராவில் ஜாதிகளை அடிப்படையாகக் கொண்டுள்ள குடியிருப்புப் பகுதிகளின் பெயர்களை நீக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.மஹாராஷ்டிரா மாநிலத்தில் குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்களின் சமூகத்தைக் கொண்டே குடியிருப்புப் பகுதிகளின் பெயர்கள் இருந்து வந்தன. ஜாதி அடிப்படையில் கொண்ட குடியிருப்பு பகுதிகளின் பெயரை மாற்ற வேண்டும் என பரிந்துரை
Maharashtra, Rechristen, CasteBasedNames, AllLocalities, சாதிப்பெயர்,ஜாதி, குடியிருப்பு பகுதிகள், நீக்கம், மஹாராஷ்டிரா, அமைச்சரவை

மும்பை: மஹாராஷ்டிராவில் ஜாதிகளை அடிப்படையாகக் கொண்டுள்ள குடியிருப்புப் பகுதிகளின் பெயர்களை நீக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்களின் சமூகத்தைக் கொண்டே குடியிருப்புப் பகுதிகளின் பெயர்கள் இருந்து வந்தன. ஜாதி அடிப்படையில் கொண்ட குடியிருப்பு பகுதிகளின் பெயரை மாற்ற வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி அந்த குடியிருப்புப் பகுதிகளுக்கு தற்போது பீம் நகர், ஜோதி நகர் போன்ற புதிய பெயர்கள் சூட்டப்படவுள்ளன.


latest tamil news



இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளுக்கு ஜாதி பெயரை நீக்குவதற்கு மஹா., அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து அமைச்சரவைக் கூட்டத்துக்கு தலைமை வகித்த முதல்வர் உத்தவ் தாக்கரே, கூறுகையில், ‛இந்த முடிவு சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும். அனைத்து ஜாதியினர் மத்தியிலும் தேசிய ஒற்றுமையை வளர்க்கும்,' என்றார்.

சமூக நீதித்துறை அமைச்சர் தனஞ்ஜெய் முண்டே தெரிவிக்கையில், ‛இந்த புரட்சிகரமான முடிவு மக்களின் பார்வையை மாற்றும். ஜாதி முறையை படிப்படியாக ஒழிக்க வேண்டும். மதிப்புடன் வாழ அனைவருக்கும் சம உரிமை உண்டு. ஜாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் யார் மீதும் பாகுபாடு காட்டக் கூடாது,' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh M - COIMBATORE,இந்தியா
03-டிச-202022:45:47 IST Report Abuse
Ramesh M சூப்பர். நல்ல திட்டம். உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்று எதுவும் இல்லை. பிரிவினை என்பதே அடுத்தவன் உழைப்பை ஏமாற்றி தின்பதுதான். அவன் வயிற்றுக்கு அவன் உழைத்தால் தான் உண்டு. எவனும் ஓசியில் கொடுக்கப்போவதில்லை. பிறகு எதற்கு ஜாதி வேற்றுமை.
Rate this:
Cancel
MANIAN K - Dubai ,இந்தியா
03-டிச-202020:15:48 IST Report Abuse
MANIAN K உதவக்கரே.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
03-டிச-202019:19:03 IST Report Abuse
Bhaskaran நம்ம ஊரில் எம்ஜியார் காலத்தில் ஜாதிப்பெயர் கொண்ட தெருக்களிலும் மாற்றம் செய்தனர் க்ரிஷ்ணமாச்சாரிசாலை க்ரிஷ்ணம்ம்மா சாலையானது .அய்யாமுத்தலி சாலை ஐயாதெருவானது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X