கூழைக்கடா பறவைகள் பார்க்கலாம் வாங்க...

Updated : டிச 03, 2020 | Added : டிச 03, 2020
Share
Advertisement
புயல் வீசலாம் என்று அறிவிக்கப்பட்ட நாளில் அதிகாலைப் பொழுதில் சென்னையில் இருந்து மாமல்லபுரம் பயணம் மேற்கொண்ட ஒரு காலைப் பொழுதில் வழியில் முட்டுக்காட்டில் ஒரு அருமயைான காட்சியை காணநேர்ந்தது. பெலிக்கான் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் கூழைக்கடா பறவைகள் கூட்டம் நீந்தியபடி கடல் நீரில் பாலம் வரை வருவதும் பின் திரும்பச் செல்வதுமாக இருக்கிறது,புதிய
latest tamil news


புயல் வீசலாம் என்று அறிவிக்கப்பட்ட நாளில் அதிகாலைப் பொழுதில் சென்னையில் இருந்து மாமல்லபுரம் பயணம் மேற்கொண்ட ஒரு காலைப் பொழுதில் வழியில் முட்டுக்காட்டில் ஒரு அருமயைான காட்சியை காணநேர்ந்தது.


latest tamil newsபெலிக்கான் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் கூழைக்கடா பறவைகள் கூட்டம் நீந்தியபடி கடல் நீரில் பாலம் வரை வருவதும் பின் திரும்பச் செல்வதுமாக இருக்கிறது,புதிய கூழைக்கடா பறவைகள் விமானம் இறங்குவது போல தண்ணீரில் நீர்க்கோடு போட்டபடி இறங்குவதும் பின் அதே தண்ணீரில் ஒடியபடி விர் என வானத்திற்கு பறப்பதுமென கூடுதல் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.


latest tamil newsசென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் வழியில் 36 வது கிலோமீட்டர் துாரத்தில் உள்ளது முட்டுக்காடு படகுக்குழாம்.கொரோனா காரணமாக மூடப்பட்டு வெறிச்சோடியுள்ள இந்த சுற்றுலா தலத்தை சமீப நாட்களாக தனது களமாக்கி கலகலப்பாக்கி வருகின்றன இந்த கூழைக்கடா பறவைகள்.


latest tamil newsகாலும் வாலும் குட்டையாகவும், பெரிய உடலுடன், அலகில் ஒரு பை போன்ற அமைப்பைக் கொண்ட இந்த மிகப் பெரிய நீர்ப்பறவை இனப்பெருக்கத்திற்காகவும்,சீதோஷ்ண மாற்றத்திற்காகவும் கண்டங்கள் பல தாண்டி நமது பகுதிக்கு வருகின்றன. இதன் எடை 4.5 முதல் 11 கிலோகிராம் வரை இருக்கும். சிறகுகளின் நீளம் 2.7 மீ. மொத்த உயரம் 127 முதல் 182 செ.மீ. அலகு நீளம் 22 செ.மீ. கூழைக்கடாக்கள் நெடுந்தூரம் வலசை செல்லும் இயல்புடையவை


latest tamil newsமீன்கள்தான் பிரதான உணவு என்பதால் பெரும்பாலும் பகல் வேளைகளில் நீர்நிலைகளில்தான் முகாமிட்டு இருக்கும்,மீன்கள் நிறைந்த இடம் என்பதாலும், மனித நடமாட்டம் கடந்த பல மாதங்களாக குறைந்ததால் ஏற்பட்டுள்ள அமைதிச்சூழ்நிலையும் இந்தப் பறவைகளை இங்கு அதிகம் ஈர்த்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.கூழைக்கடா பறவைகளை மிக நெருக்கமாக பார்க்க விருப்பம் உள்ளவர்கள் இங்கு வரலாம் அதனை தொந்திரவு செய்யாமல் இருந்தால் அதற்கும் சந்தோஷம் உங்களுக்கும் சந்தோஷம்.

-எல்.முருகராஜ்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X