சென்னை: சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் - ஐதராபாத் இடையே, தினமும் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து, தினமும் மாலை, 4:45க்கு புறப்பட்டு,மறுநாள் அதிகாலை,5:40 மணிக்கு, தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் சென்றடையும். ஐதராபாதில் இருந்து, தினமும் மாலை, 4:45க்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 5:45 மணிக்கு, சென்னை சென்ட்ரல் வந்தடையும். சென்னை சென்ட்ரலில் இருந்து, 10ம் தேதி; ஐதராபாதில் இருந்து, 11ம் தேதி முதல், இந்த ரயில் போக்குவரத்து துவங்குகிறது. இதற்கான முன்பதிவு இன்று ஆரம்பமாகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE