பொது செய்தி

தமிழ்நாடு

சாலையோர வியாபாரிகள் 'கேரி பேக்'கில் பொருள் விற்பனை

Added : டிச 03, 2020
Share
Advertisement
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசினால் தடை செய்யப்பட்ட பாலிதீன் கவர்களை பயன்படுத்த சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதற்காக பலமுறை நகர் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்து தடைசெய்யப்பட்ட பாலிதீன் கவர்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். இதுகுறித்து, அப்பகுதியில் கடை

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசினால் தடை செய்யப்பட்ட பாலிதீன் கவர்களை பயன்படுத்த சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதற்காக பலமுறை நகர் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்து தடைசெய்யப்பட்ட பாலிதீன் கவர்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். இதுகுறித்து, அப்பகுதியில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் கூறியதாவது: கடைகளில் தடைசெய்யப்பட்ட கேரிபேக் உள்ளிட்ட பாலிதீன் கவர்களை வாடிக்கையாளர்களுக்கு தரக்கூடாது. மீறினால், 5,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என, அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், தினந்தோறும் சாலையோரத்தில் ஆட்டோ மற்றும் வாகனங்களில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவித தங்கு தடையுமின்றி கேரி பேக் வினியோகம் செய்கின்றனர். எனவே, பாலிதீன் கவர்களை முற்றிலும் ஒழிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X