பொது செய்தி

தமிழ்நாடு

அங்ககச் சான்று பதிவு: விண்ணப்பிக்க அழைப்பு

Added : டிச 03, 2020
Share
Advertisement
கரூர்: 'இயற்கை விவசாயம் செய்பவர்கள் அங்ககச் சான்று பதிவு பெற விண்ணப்பிக்கலாம்' என, உதவி இயக்குனர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: இயற்கை வேளாண் மூலமாக உற்பத்தி செய்யப்படும் உணவுப்பயிர்கள், பழங்கள், காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைப்பதுடன் மண்வளமும் பாதுகாக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபடுதல் குறைகிறது. சந்தையில் விற்பனை செய்யும்போது இயற்கை

கரூர்: 'இயற்கை விவசாயம் செய்பவர்கள் அங்ககச் சான்று பதிவு பெற விண்ணப்பிக்கலாம்' என, உதவி இயக்குனர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: இயற்கை வேளாண் மூலமாக உற்பத்தி செய்யப்படும் உணவுப்பயிர்கள், பழங்கள், காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைப்பதுடன் மண்வளமும் பாதுகாக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபடுதல் குறைகிறது. சந்தையில் விற்பனை செய்யும்போது இயற்கை சான்று பெறும் பட்சத்தில் விற்பனை வாய்ப்பு அதிகமாக கிடைக்கிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு, மத்திய அரசின் அபீடா நிறுவனம் சார்பில் அங்ககச் சான்று அளிக்கப்படுகிறது. இதில், குறிப்பிட்ட உற்பத்தி அல்லது பதப்படுத்தும் முறையில் விளைபொருட்களின் தரத்தை நிர்ணயம் செய்தும் வழி முறைகள் ஏற்படுத்தியும், உறுதியாக்கம் செய்தும் அங்ககச் சான்றளிப்பு உத்தரவாதம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்படி சான்று பெற தனி நபராகவோ, குழுவாகவோ அல்லது பெரு வணிக நிறுவனங்களும் பதிவு செய்து கொள்ளலாம். விபரங்களுக்கு, கரூர் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனரை, நேரிலோ அல்லது 88257 11249 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X