பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு உதவித்தொகை: மாற்றுதிறனாளிக்கு மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு அழைப்பு

Added : டிச 03, 2020
Share
Advertisement
நாமக்கல்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் படியும், கொரோனா பரவல் காரணமாக, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாலும், பொருளாதார நிலையில் பாதிக்கப்பட்டுள்ள, அனைத்து மாற்றுதிறனாளிகளுக்கும், சிறப்பு உதவித் தொகையாக, 1,000 ரூபாய் தமிழக அரசு வழங்கி வருகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுதிறனாளிகளும், இதுவரை, இந்த உதவித்தொகை பெறாதவர்கள்,

நாமக்கல்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் படியும், கொரோனா பரவல் காரணமாக, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாலும், பொருளாதார நிலையில் பாதிக்கப்பட்டுள்ள, அனைத்து மாற்றுதிறனாளிகளுக்கும், சிறப்பு உதவித் தொகையாக, 1,000 ரூபாய் தமிழக அரசு வழங்கி வருகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுதிறனாளிகளும், இதுவரை, இந்த உதவித்தொகை பெறாதவர்கள், மாற்றுதிறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ள முடியாதவர்கள். தேசிய அடையாள அட்டை வாங்க இயலாதவர்கள், மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் வாங்க இயலாதவர்கள், நாமக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம். மேலும், நேரில் வர முடியாதவர்கள், 18004254286 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அதேபோல், dlsanamakkal@gmail.com என்ற இணையதள முகவரியிலும் தகவல் அனுப்பி பயன்பெறலாம். பரமத்தி, ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய சார்பு நீதிமன்றங்களில் இயங்கி வரும் சட்டப் பணிகள் குழுவை அணுகி, மனு அளித்தும் பயன்பெறலாம். இவ்வாறு, மாவட்ட முதன்மை நீதிபதி தனசேகரன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X