சிலிக்கான் மூலம் தயாரிக்கப்படும் சூரிய ஒளி மின் தகடுகள், மெல்ல காலாவதியாகிவிடும் போலிருக்கிறது. ஏனெனில், அதைவிட அதிக மின் உற்பத்தியை தரும் பெரோவ்ஸ்கைட் என்ற தாதுக்களால் ஆன சூரிய மின்தகடுகள் வந்துவிட்டன. ஆனால், அவற்றில் ஒரு சிக்கல். பெரோவ்ஸ்கைட் சூரிய மின் தகடுகளை, தொழிற்சாலையில் அத்தனை வேகமாக உற்பத்தி செய்ய முடியாத நிலை நீடித்து வந்தது.அண்மையில் அந்த நிலையை ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மாற்றியுள்ளனர். 'அதிவிரைவு பிளாஸ்மா தெளிப்பான்' என்று அழைக்கப்படும் இந்த புதிய முறையின்படி, ஒரு கண்ணாடியின் மீது நிமிடத்திற்கு, 40 அடி நீள பெரோவ்ஸ்கைட் படலத்தை உருவாக்கிவிட முடியும்.தவிர, இந்த முறையில் சூரிய மின் ஒளித்தகடை தயாரிக்கும்போது சிலிக்கான் தகடைவிட, உற்பத்தி விலை குறைவாக இருக்கும் என, ஸ்டான்போர்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.சிலிக்கான் தகடுகள் மீது விழும் சூரிய ஒளியில், 25 சதவீதத்தை மின்சாரமாக மாற்றும் திறன் பெற்றுள்ளன. ஆனால், பெரோவ்ஸ்கைட் பூசிய தகடுகள் அதையும் மிஞ்சுகின்றன. எனவே, விரைவில், பெரோவ்ஸ்கைட் சிலிக்கானுக்கு மாற்றாக வந்துவிடும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE