சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

பாசியும், பாக்டீரியாவும் எரிபொருளாகுமா?

Added : டிச 03, 2020
Share
Advertisement
பெட்ரோலியத்திற்கு மாற்று எரிபொருளாக விஞ்ஞானிகள் ஹைட்ரஜனை தீவிரமாக பரிந்துரைக்கின்றனர். இதை அதிக செலவில்லாமல் உற்பத்தி செய்யும் முறைகளை உருவாக்குவதில், அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அண்மையில், இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகம் மற்றும் சீனாவிலுள்ள ஹார்பின் தொழில்நுட்ப நிலையம் ஆகிய இரண்டின் ஆராய்ச்சியாளர்கள், ஒரு அசத்தல் கண்டுபிடிப்பை
பாசியும், பாக்டீரியாவும் எரிபொருளாகுமா?

பெட்ரோலியத்திற்கு மாற்று எரிபொருளாக விஞ்ஞானிகள் ஹைட்ரஜனை தீவிரமாக பரிந்துரைக்கின்றனர். இதை அதிக செலவில்லாமல் உற்பத்தி செய்யும் முறைகளை உருவாக்குவதில், அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அண்மையில், இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகம் மற்றும் சீனாவிலுள்ள ஹார்பின் தொழில்நுட்ப நிலையம் ஆகிய இரண்டின் ஆராய்ச்சியாளர்கள், ஒரு அசத்தல் கண்டுபிடிப்பை நிகழ்த்திஉள்ளனர்.

தண்ணீரில் பாசி, கார்பன் - டை ஆக்சைடு வாயுவை உறிஞ்சி, ஒளிச்சேர்க்கை மூலம் எப்படி ஆக்சிஜனை தயாரிக்கிறது என, அவர்கள் ஆராய்ந்து வந்தனர். இனிப்பான திரவத்தின் ஒரு சொட்டுக்குள், சில ஆயிரம் பாசி செல்களை வைத்து சோதித்தபோது, அந்த செல்கள் அதிக அளவில் ஆக்சிஜன் அளவு வேகமாக குறைந்தது.

இதன் விளைவாக, ஹைட்ரோஜனாசிஸ் என்ற என்சைம் பாசியில் உற்பத்தியாகி, ஆக்சிஜனுக்கு பதிலாக, ஹைட்ரஜனை உற்பத்தி செய்யத் துவங்கியது.இந்த இனிப்புத் துளிக்குள் சிறிது பாக்டீரியாவையும் சேர்த்தால், ஹைட்ரஜன் உற்பத்தி அதிகமாக இருக்கும் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துஉள்ளனர்.

சிறு துளி அளவில் செய்ததை, விஞ்ஞானிகள் ஒரு பெரிய தொழிற்சாலை அளவில் செய்ய முயற்சிகளை துவங்கிவிட்டனர்.அது வெற்றி பெற்றால், பாசி மற்றும் பாக்டீரியாக்கள், ஆலைகளில் ஹைட்ரஜன் எரிபொருளை உற்பத்தி செய்து, வாகனங்களுக்கு எரிபொருளாக மாறக்கூடும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X