மூணாறு : மூணாறைச்சுற்றியுள்ள எஸ்டேட்பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் களம்சூடு பிடிக்க துவங்கியது.
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் டிச.8,10,14ல் மூன்று கட்டங்களாக நடக்கிறது.இடுக்கி மாவட்டத்தில் முதல்கட்டமாக டிச.8ல் தேர்தல் நடக்கிறது. அதற்கான பிரசாரம் நேற்று துவங்கியது.மாவட்டத்தில் தேவிகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட மூணாறு,தேவிகுளம் ஊராட்சிகளில் தேயிலை எஸ்டேட்டுகள் உள்ளன. அங்கு தமிழர்கள் தொழிலாளர்களாக பல தலைமுறைகளாக வேலை செய்து வருகின்றனர்.
10 ஆண்டுகளாக காங்., வசம் உள்ள மூணாறு ஊராட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் காங்., கூட்டணியும், இந்த முறை ஊராட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் இடது சாரி கூட்டணியும் தேர்தல் பணிகளை செய்து வருகின்றன.அதேபோல் தங்கள் வசம் உள்ள தேவிகுளம் ஊராட்சியை தக்க வைப்பதற்கு தேவையான அனைத்து முயற்சிகளை இடது சாரி கூட்டணியும், ஊராட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற குறிக்கோளில் காங்., கூட்டணியும் தேர்தல் பணிகள் செய்வதால் எஸ்டேட் பகுதிகளில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE