சென்னை : ஜனவரியில் புதிய கட்சி துவங்குவதாக டுவிட்டரில் அறிவித்துள்ள ரஜினி, அதன் உடன் ''இப்போஇல்லேன்னாஎப்பவும்_இல்ல'' என்ற ஹேஷ்டாக்கையும் பதிவிட்டார். இப்போது அது டுவிட்டரில் தேசிய அளவில் டாப்பில் டிரெண்ட் ஆனது.
தமிழகத்தில் இருபெரும் அரசியல் ஆளுமைகளான முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பின் அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டதாக கூறிய ரஜினி, அரசியல் இறங்கபோவதாக அறிவித்தார். அதன்பின் பல்வேறு காலக்கட்டங்களில் தனது அரசியல் நிலைப்பாட்டை குழப்பங்களுடன் முன்வைத்தார். சில வாரங்களுக்கு முன் உடல்நிலையை கருத்தில் ரஜினி அரசியலில் இறங்கமாட்டார் என பொய்யான அறிக்கை அவர் பெயரில் வெளியானது.
அந்த அறிக்கை என்னுடையது அல்ல, ஆனால் அதில் சொல்லப்பட்ட விஷயம் உண்மை என்றார் ரஜினி. இதனால் அவர் அரசியலில் இறங்கமாட்டார் என கூறப்பட்டது. இந்த சமயத்தில் சில தினங்களுக்கு முன் திடீரென தனது மக்கள் மன்ற நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்தினார். எனது முடிவை விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதாகவும், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என டுவிட்டரில் பதிவிட்டார் ரஜினி. மேலும் அவர் ஏற்கனவே முன்வைத்த ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்... அதியம்.... நிகழும்!! என குறிப்பிட்டு, #இப்போஇல்லேன்னாஎப்பவும்_இல்ல.'' என ஹேஷ்டாக்கையும் பதிவிட்டுள்ளார்.

ரஜினியின் அந்த அறிவிப்பு ஒட்டுமொத்த மீடியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இவரின் அறிவிப்பு வெளியானதுமே அது டுவிட்டரில் டிரெண்டிங் ஆனது. குறிப்பாக ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். நீண்டநாள் காத்திருப்பு வீண்போகவில்லை என தங்களது மகிழ்ச்சியை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பல ஊர்களில் அவரின் ரசிகர்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அவரின் அரசியல் வருகை தமிழகத்தில் மற்ற அரசியல் கட்சியினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தும் என தங்களது கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர். மேலும் ரஜினியின் பிரபலமான பன்ஞ் வசனங்களையும், காட்சிகளையும், மகிழ்ச்சியோடு ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
பல அரசியல் கட்சி தலைவர்களும் அவரின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் டுவிட்டரில் ரஜினி சத்தம் தான் அதிகம் ஒலிக்கிறது. குறிப்பாக #இப்போஇல்லேன்னாஎப்பவும்இல்ல என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆகின. அதன் உடன் #Rajinikanth, #Superstar, #Thalaivar, #ரஜினிகாந்த், #ஆன்மிகஅரசியல், #மாத்துவோம்எல்லாத்தையும்_மாத்துவோம் போன்ற ஹேஷ்டாக்குகளு் டிரெண்ட் ஆகின.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE