'கிரைம் ரவுண்ட் அப்'; பொன்னேரி அருகே 200 பவுன் நகை கொள்ளை

Updated : டிச 04, 2020 | Added : டிச 03, 2020 | |
Advertisement
01. ஜார்கண்ட் மாநிலம் ஜமுனா பாலம் அருகே திருமணத்திற்கு வேனில் சென்றவர்கள் சிலர் வேனின் மேல் அமர்ந்து இருந்தனர். இதில் மின் வயரில் சிக்கி மின்சாரம் தாக்கி 2 பேர் பலியாகினர்.தமிழகத்தின் நிகழ்வு01. சென்னை மந்தைவெளியில் தனது வீட்டில் இருந்த ரூ.44 லட்சத்தை திருடி பேஸ்புக் நண்பருக்கு வழங்கிய பெண் தஸ்னீம் கைது. கணவன் அளித்த புகாரில் வீட்டுக்குள் மனைவியே இந்த

01. ஜார்கண்ட் மாநிலம் ஜமுனா பாலம் அருகே திருமணத்திற்கு வேனில் சென்றவர்கள் சிலர் வேனின் மேல் அமர்ந்து இருந்தனர். இதில் மின் வயரில் சிக்கி மின்சாரம் தாக்கி 2 பேர் பலியாகினர்.latest tamil news
தமிழகத்தின் நிகழ்வு


01. சென்னை மந்தைவெளியில் தனது வீட்டில் இருந்த ரூ.44 லட்சத்தை திருடி பேஸ்புக் நண்பருக்கு வழங்கிய பெண் தஸ்னீம் கைது. கணவன் அளித்த புகாரில் வீட்டுக்குள் மனைவியே இந்த திருட்டை செய்துள்ளது அம்பலமானது.

02. சென்னை ஆலம்பாக்கம் அருகே தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகி அவரிடம் 5 பேர் சிபிஐ அதிகாரிகள் என போலியாக நடித்து ரூ.5 கோடி கேட்டு மிரட்டினர். போலீசில் புகார் தெரிவித்ததை அடுத்து 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

03. பெரம்பலூர்: பிரதமர் திட்டத்தின் கீழ் வீடு கட்ட லஞ்சம் கேட்ட ஊராட்சி செயலர் சஸ்பெண்ட்.

04. திருவண்ணாமலையில் பழிக்குப்பழியாக பங்க் பாபு வெட்டி கொலை .

05. சென்னை விமான நிலையத்தில் ரூ. 23 லட்சம் மதிப்புள்ள தங்கம், விலை உயர்ந்த செல்போன், லேப்டா் பறிமுதல்.

06. மதுரை மாவட்டம் மத்திய சிறையில் கைதி பரணிவளவன் தற்கொலை.

07.பொன்னேரி அருகே 200 பவுன் நகை கொள்ளை

திருவள்ளூர்: பொன்னேரி அருகே உத்தண்டிகண்டிகையில், ஒப்பந்ததாரரான முனிநாதன் என்பவரது வீட்டில் 200 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. உறவினருக்கு உடல்நிலை சரியில்லாததால், முனிநாதன் மருத்துவமனை சென்ற நேரம் பார்த்து, அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள், 6 கிலோ வெள்ளி, ரூ.1.50 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.உலக நடப்பு


latest tamil news01. எட்டு கிலோ எடை கொண்ட 763 வைரம் பதித்த தங்கப்பறவை ஒன்று கனடாவில் கொள்ளை அடிக்கப்பட்டது. இதற்கான இழப்பீட்டை கோரிய மனு கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

02. ஊழல் வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு .

03. சீனாவில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற லியூ (54 வயது)வுக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டது. 4 மாதத்தில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டது பாராட்டுக்குரியது என அப்பகுதியினர் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X