புதுடில்லி: இந்தியாவில் சிறந்த 10 போலீஸ் ஸ்டேசன்களில், சேலம், சூரமங்களம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசன் 2வது இடத்தை பிடித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், நாட்டின் சிறந்த 10 போலீஸ் ஸ்டேசன்களை தேர்வு செய்து மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. குற்றங்களை கண்டறிதல், குற்றவாளிகளை விரைவாக கைது செய்தல், குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல், சட்டம் ஒழுங்கை பராமரித்தல், விபத்துகளை குறைத்தல், விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுதல், சமுதாய பணிகளில் ஆர்வம் காட்டுதல், குற்றப்பதிவேடுகளை கணினி மூலம் பராமரித்தல், புகார் அளிக்க வரும் பொது மக்களை வரவேற்கும் விதம் ஆகியவற்றை அடிப்படையாக விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான விருதுக்காக பரிசீலனையில் 16,671 போலீஸ் ஸ்டேசன்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், 75 இரண்டாம் கட்ட பரிசீலனைக்கு சென்று கடைசியில் விருதுக்கு 10 போலீஸ் ஸ்டேசன்கள் தேர்வாகின.இதற்காக நடத்தப்பட்ட, 4,065 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட இந்த, ஆய்வில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், மத்திய அரசுக்கு உதவி செய்தன.
இதனடிப்படையில், இந்த ஆண்டிற்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 10 போலீஸ் ஸ்டேசன்கள்:
01. நேங்போக் செக்மை போலீஸ் ஸ்டேசன்( தவுபல், மணிப்பூர்)
02. சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசன்( சேலம், தமிழகம்)
03. கர்சங் போலீஸ் ஸ்டேசன் ( சர்லங், அருணாச்சல பிரதேசம்)
04. ஜில்மிலி போலீஸ் ஸ்டேசன் ( சூரத்பூர், சத்தீஸ்கர்)
05. சன்கியூம் போலீஸ் ஸ்டேசன் ( தெற்கு கோவா, கோவா)
06. கலிகட் போலீஸ் ஸ்டேசன் ( வடக்கு மற்றும் மத்திய அந்தமான், அந்தமான் நிகோபார் தீவுகள்)
07. பக்யோங் போலீஸ் ஸ்டேசன்( கிழக்கு மாவட்டம், சிக்கிம்)
08. கந்த்போலீஸ் ஸ்டேசன்(மொராதாபாத், உ.பி.,)
09. கன்வெல்போலீஸ் ஸ்டேசன்( தாத்ரா மற்றும்நாகர்ஹவேலி)
10. ஜம்மிகுன்டா நகர் போலீஸ் ஸ்டேசன்( கரீம்நகர், தெலுங்கானா) ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE