சென்னை: அடுத்த 3 மணி நேரத்திற்கு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல்,அரியலூர், கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், நாகப்பட்டினம், ஈரோடு, காங்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலை கொண்டிருந்த புரெவி புயல் குமரி கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று நள்ளிரவுக்கு மேல் பாம்பன் - கன்னியாகுமரி இடையே தமிழக கடற்கரையை புரெவி புயல் கடக்கலாம்.

பாம்பன் அருகே 16 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வரும் புயல், இன்னும் 3 மணிநேரத்தில் பாம்பனுக்கு குறுக்கே செல்லும். அப்போது, மணிக்கு 90 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் புயலின் தாக்கம் இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அடுத்த 3 மணி நேரத்திற்கு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், நாகப்பட்டினம், ஈரோடு, காங்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE