ஜப்பானில் புதிய பெட்ரோல் வாகனங்களுக்கு அனுமதி இல்லை: பிரதமர் சுகா அதிரடி

Updated : டிச 03, 2020 | Added : டிச 03, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
டோக்கியோ: உலகம் முழுவதும் புவி வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து கார்பன் புகைகளை கட்டுபடுத்த உலகின் வல்லரசு நாடுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைய வேண்டும் என்ற நோக்கில் ஜோ பைடன் செயல்பட்டு வருகிறார். தற்போது பருவ நிலையை காக்க ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா முக்கிய முடிவு ஒன்றை
Japan, BanSale, NewGasoline, PoweredVehicles, 2030s, ஜப்பான், பிரதமர், சுகா, பெட்ரோல், வாகனங்கள், அனுமதி, இல்லை

டோக்கியோ: உலகம் முழுவதும் புவி வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து கார்பன் புகைகளை கட்டுபடுத்த உலகின் வல்லரசு நாடுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைய வேண்டும் என்ற நோக்கில் ஜோ பைடன் செயல்பட்டு வருகிறார். தற்போது பருவ நிலையை காக்க ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். வாகனப் புகை வெளியிடும் கார்பன் வாயுவால் குளோபல் வார்மிங் அதிகரிக்கிறது. இதனைத் தடுக்க வரும் 2030-க்குள் நடவடிக்கை எடுக்க அவர் முடிவெடுத்துள்ளார். உலகமே மின்சாரத்தில் செயல்படும் வாகனங்களை பயன்படுத்த முயன்றுவரும் நிலையில் ஜப்பான் அந்த முடிவில் உறுதியாக உள்ளது.


latest tamil news


இனி புதிதாக எந்த ஒரு பெட்ரோல் வாகனத்துக்கும் ஜப்பானில் அனுமதி வழங்கப்படாது எனவும் மின்சார வாகன உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் சுகா தெரிவித்துள்ளார். இதனால் 2030ம் ஆண்டு மத்தியில் ஜப்பானில் பழைய பெட்ரோல் வாகனங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து மின்சாரத்தில் செயல்படும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வரும் 2050ம் ஆண்டிற்குள் ஜப்பானில் பெட்ரோல் வாகனங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு மின்சாரத்தில் செயல்படும் வாகனங்கள் சாலைகளில் செல்லும். இதுவே ஜப்பானின் எதிர்கால இலக்கு என்று அவர் கூறியுள்ளார்.


latest tamil news


ஜி7 நாடுகளில் ஒன்றான ஜப்பான் இந்த முடிவை எடுத்திருப்பது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளில் ஒன்றான ஜப்பான் வாகனப் புகையை கட்டுப்படுத்த எடுத்த இந்த முடிவு மற்ற நாடுகளையும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

அனைத்து நாடுகளும் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துவதால் பெட்ரோல், டீசல் தேவைகளுக்காக மத்திய தரைக்கடல் நாடுகளை நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை படிப்படியாக குறையும். நாட்டில் ஆங்காங்கு மின்சார உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு மின்சார வாகனங்கள் பயன்பாட்டுக்கு வரும்போது கார்பன் புகை பெருமளவில் கட்டுப்படுத்தப்படும். இதனால் பருவநிலை மாற்றம் வெகுவாக குறையும்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
03-டிச-202020:40:22 IST Report Abuse
Ramesh Sargam சரியான முடிவைத்தான் ஜப்பான் பிரதமர் எடுத்திருக்கிறார். இந்த முடிவை இந்தியாவும் உடனே எடுக்கவேண்டும். இல்லையென்றால் சுற்றுசூழல் இந்தியாவில் மிகவும் பாதிக்கப்படும்.
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,கனடா
03-டிச-202019:33:38 IST Report Abuse
அன்பு இது அதிரடியா? ரெண்டாயிரத்து முப்பத்திலிருந்து, ரெண்டாயிரத்து ஐம்பதாம் வரை படிப்படியாக குறைக்க போகிறார்களாம். மரங்கள் அழிப்பதை நிறுத்தாவிடில், ரெண்டாயிரத்து ஐம்பதில், இந்த உலகமே முடிவுக்கு வந்துவிடும். மரங்கள் குறைய குறைய, மழை குறையும். மழை குறைய குறைய, மரங்கள் குறையும். இது ஒரு சூழலாக ஏற்பட்டு, முடிவில் இந்த உலகம் அழியும். உலக வெப்பமயத்தையே குறைக்க, ரெண்டாயிரத்து முப்பதில் அணைத்து நாடுகள் பெட்ரோல் வண்டிகளை படிப்படியாக குறைத்து, நாற்பதில் முழுக்க குறைக்க வேண்டும்.
Rate this:
Cancel
03-டிச-202018:56:38 IST Report Abuse
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) சப்பான் ஐயா அரேபிங்க பொலப்புல இப்புடி மண்ணவாரி போடலாமா
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
04-டிச-202006:06:11 IST Report Abuse
 Muruga Velஅரேபியாவில் இனி ஒட்டக பயணமும் பேரீச்சம்பழ உணவும் தான் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X