ஆட்சியை விட்டு விலகும் நேரத்திலும் சீனாவுக்கு எதிரான டிரம்பின் உத்தரவு

Updated : டிச 03, 2020 | Added : டிச 03, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக வரும் ஜனவரி மாதம் 20-ஆம் தேதி ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் தனது தோல்வியை ஏற்றுக்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். தற்போது ஆட்சிமாற்றம் குழு அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.வெள்ளை மாளிகையை விட்டு வெளியே வருவதற்கு முன் இறுதி கட்ட அரசு பணிகளை டொனால்ட் டிரம்ப்
UnitedStates, Toughens, VisaRules, Malign, Chinese, CommunistParty, Members, அமெரிக்கா, டிரம்ப், சீனா, விசா, உத்தரவு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக வரும் ஜனவரி மாதம் 20-ஆம் தேதி ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் தனது தோல்வியை ஏற்றுக்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். தற்போது ஆட்சிமாற்றம் குழு அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

வெள்ளை மாளிகையை விட்டு வெளியே வருவதற்கு முன் இறுதி கட்ட அரசு பணிகளை டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். இதில் முக்கிய பணியாக தற்போது சீன கம்யூனிச அரசுக்கு எதிராக ஓர் உத்தரவை டொனால்ட் டிரம்ப் அரசு பிறப்பித்துள்ளது. சீன கம்யூனிச கட்சியை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய புதிய விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு ஏற்கனவே இருந்த சில சலுகைகள் பறிக்கப்பட்டன. ஆட்சியை விட்டு கிளம்பும் நேரத்திலும் சீன கம்யூனிச அரசுக்கு எதிரான செயலில் டிரம்ப் ஈடுபட்டுள்ளது விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது.


latest tamil news


அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை டிரம்பின் இந்த நடவடிக்கை குறித்து அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளவர்களது குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்காவில் தங்குவதற்கு புதிய கட்டுப்பாடுகள் இடப்பட்டுள்ளன. அமெரிக்காவில் சாமானிய குடிமகன்கள் தற்காலிக விசாவை பத்து வருடங்களுக்கு நீட்டிக்க முடியும். ஆனால் கம்யூனிச கட்சியை சேர்ந்தவர்களுக்கு தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கம்யூனிஸ கட்சியை சேர்ந்தவர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் அதிக நாட்கள் தங்க அனுமதி வழங்கினால் அமெரிக்காவின் உள்நாட்டு விஷயங்களை அவர்கள் திருட வாய்ப்புள்ளது என்று டொனால்ட் டிரம்ப் அரசு இதற்கு காரணம் கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
04-டிச-202015:40:04 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan 100 % correect
Rate this:
Cancel
MANIAN K - Dubai ,இந்தியா
04-டிச-202008:31:41 IST Report Abuse
MANIAN K சரியான உத்தரவு
Rate this:
Cancel
Siva Kumar - chennai,இந்தியா
04-டிச-202005:19:30 IST Report Abuse
Siva Kumar நம் நாட்டு காங்கிரஸ் கட்சி கற்று கொள்ள வேண்டிய பாடம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X