அறிவியல் ஆயிரம்
பெண்களுக்கு அதிகம்
முதன்முறையாக நெஞ்சுவலி ஏற்பட்டு, அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் மரணிப்பது ஆண்களை விட, பெண்களுக்கு 20 சதவீத வாய்ப்பு அதிகம் என ஆய்வில் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கனடாவில் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட 45,064 நோயாளிகளை ஆய்வு செய்தனர். அவர்களை தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்கு கண்காணித்ததில் இதை கண்டறிந்தனர். கொலஸ்ட்ரால், ரத்த அழுத்த அளவை சீராக வைத்தல், தினமும் உடற்பயிற்சி, சத்தான உணவு, புகை, மது பழக்கத்தை ஒழிப்பது இருதயத்தை பாதுகாக்கும்.
தகவல் சுரங்கம்
கப்பல்படை தினம்
இந்திய கடற்கரையின் நீளம் 7517 கி.மீ. இதனால் கடலோர பாதுகாப்பு முக்கியமானது. எதிரிகளிடமிருந்து கடல் பகுதிகளை பாதுகாப்பதில் கப்பல் படை முக்கிய பங்கு வகிக்கிறது. 1971ல் நடந்த இந்தியா-பாக்., இடையேயான போரின் போது, டிச.4ம் தேதி 'ஆப்பரேஷன் டிரைடன்ட்' என்ற பெயரில் இந்திய கப்பல்படை, பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சி மீது தாக்குதல் நடத்தி வென்றது. இதனை நினைவுபடுத்தும்விதமாக டிச.4ல் இந்திய கப்பல்படை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் கப்பல் படை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE