தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முன்னாள் அதிபர்கள்: நம்பிக்கை ஏற்படுத்த நடவடிக்கை

Updated : டிச 03, 2020 | Added : டிச 03, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
வாஷிங்டன்: உலக மக்களிடையே கொரோனா தடுப்பூசி குறித்த சந்தேகங்கள், அச்சங்கள் நிலவுகின்றன. இதற்கு அமெரிக்காவும் விதிவிலக்கல்ல. அந்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக முன்னாள் அதிபர்களான ஒபாமா, புஷ், கிளின்டன் ஆகியோர் கேமரா முன் தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளனர். அமெரிக்காவில் கொரோனா வைரசின் தீவிரம் குறையவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 லட்சம்

வாஷிங்டன்: உலக மக்களிடையே கொரோனா தடுப்பூசி குறித்த சந்தேகங்கள், அச்சங்கள் நிலவுகின்றன. இதற்கு அமெரிக்காவும் விதிவிலக்கல்ல. அந்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக முன்னாள் அதிபர்களான ஒபாமா, புஷ், கிளின்டன் ஆகியோர் கேமரா முன் தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளனர்.



latest tamil news



அமெரிக்காவில் கொரோனா வைரசின் தீவிரம் குறையவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 லட்சம் பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 1 லட்சம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத மோசமான நிலை என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசியை கொண்டு வருவதில் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எப்.டி.ஏ.,) மும்முரமாக இறங்கியுள்ளது.
அமெரிக்க மருந்து நிறுவனமான பைசர் தடுப்பூசிக்கு பிரிட்டன் ஒப்புதல் வழங்கிவிட்டது. இதனால் எப்.டி.ஏ.,வை டிரம்ப் விமர்சித்துள்ளார்.
பல்வேறு தடுப்பூசிகளும் 90 சதவீதத்துக்கு மேல் செயல்திறன் கொண்டவை என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் தடுப்பூசி தொடர்பாக மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் பிரசாரத்தில் முன்னாள் அதிபர்கள் ஈடுபட உள்ளனர். ஒபாமா, புஷ், பில் கிளின்டன் ஆகியோர் எப்.டி.ஏ., ஒப்புதல் அளிக்கும் தடுப்பூசியை பொது மக்கள் முன்னிலையில் செலுத்திக்கொள்ள தயார் என அறிவித்துள்ளனர்.


latest tamil news



இது பற்றி ஒபாமா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: தேசிய தொற்றுநோய்கள் நிபுணர் அந்தோனி பாசியை முழுமையாக நம்புகிறேன். நான் அவருடன் பணியாற்றியுள்ளேன். இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்று அந்தோனி பாசி எதைச் சொல்கிறாரோ அந்த தடுப்பூசியை போட்டுக்கொள்வேன். உங்களுக்கு கொரோனா ஏற்படாமல் தடுப்பூசி தடுக்கும். நான் அறிவியலை நம்புகிறேன். அதனை மக்களுக்கு காட்ட தொலைக்காட்சி முன்பு தடுப்பூசி செலுத்திக்கொள்வேன். என்று கூறினார். மற்ற முன்னாள் அதிபர்களின் செயலர்களும் இதையே கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
04-டிச-202006:21:32 IST Report Abuse
 Muruga Vel அமெரிக்காவில் மின்சார விளக்கு கார் போன்ற வாகனங்களை உபயோகிக்காத கிறித்துவ கும்பல் ஒன்னு இருக்கு ..ஆஸ்பத்திரிக்கும் போக மாட்டார்கள் ..
Rate this:
Cancel
03-டிச-202020:07:56 IST Report Abuse
ஆப்பு சீனாவை இந்த அளவுக்கு வளர்த்து விட்டவங்க... இவிங்க மூவரும்தான்.
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
03-டிச-202019:35:39 IST Report Abuse
mindum vasantham unmayil intha noyil pala murai அலைந்து விட்டேன் வேலை நிமித்தமாக எனக்கு ஒன்னும் ஆகவில்லை ஆனால் இரண்டு முறை தொண்டை கறரத்து மூக்கு கட்டி விட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X