சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபடுவதற்கு உரிய வயது வரம்பை கேரள அரசு நிர்ணயம் செய்துள்ளது.50 முதல் 65 வயதுக்கு உள்பட்ட பெண்களே தரிசனம் செய்ய முடியும்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடுவதற்கு , உச்சநீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் அனுமதி அளித்துதீா்ப்பளித்தது.அந்த தீா்ப்பை அமல்படுத்த முயன்ற கேரள அரசை எதிர்த்து, பல்வேறு ஹிந்து அமைப்புகளும், ஆன்மிக அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டன.பெண்களின் உரிமையை மறுக்க முடியாது என்றும் கேரள அரசு விளக்கம் அளித்தது.
சபரிமலை ஐயப்ப பக்தா்களின் சேவைகளுக்காக, கேரள காவல் துறையுடன் இணைந்து புதிய வலைதளத்தை திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம் (டிடிபி) தொடங்கி இருக்கிறது. அந்தவலைதளத்தில் '50 வயதுக்கும் குறைவான பெண்களும், 65 வயதுக்கும் மேற்பட்ட பெண்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, கொரோனா நோய்த்தொற்று காரணமாக, 10 வயதுக்கும் குறைவான சிறுமிகளும், 65 வயதுக்கும் மேற்பட்ட பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுமதி இல்லை என்று கேரள அரசு அறிவித்து இருந்தது.இப்போது 50முதல் 65 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு அனுமதி என்று அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் மூலம் சபரிமலையில் இளம் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது.கொரோனா காரணமாக 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. 65 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE