புதுடில்லி: விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இன்று நடத்திய 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகள் டில்லி ஹரியானா எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் டிச.,1 -ல் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அதில், எந்த முடிவும் எடுக்கப்படாததால், இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. 7 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
![]()
|
முன்னதாக விவசாய சங்க பிரதிநிதிகள் கூறுகையில், குறைந்தபட்ச ஆதார விலையை மட்டும் சட்டப்பூர்வமாக்குவது என்பது பிரச்னைக்கு தீர்வு ஏற்படாது. வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் . அதுவரை நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என தெரிவித்தனர். இதையடுத்து மீண்டும் டிசம்பர் 5-ம் தேதி பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் கூறியது, வேளாண் விலை பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை தொடரும், விவசாயிகளுக்கான சட்டரீதியான உரிமை , சலுகைகள் வழங்குவது பரிசீலிக்கப்படும் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE