அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்

Updated : டிச 04, 2020 | Added : டிச 03, 2020 | கருத்துகள் (38)
Share
Advertisement
வாஷிங்டன்: கொரோனாவுக்கு எதிர்ப்புசக்தியை அளித்து வரும் தமிழகத்தின் ரசம் அமெரிக்காவை கலக்கி வருகிறது. உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று அமெரிக்காவை பெரிதும் பாதித்தது. இந்நிலையில் நியூயார்க், நியூஜெர்சி, பிரின்ஸ்டன் ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் கொரோனாவை வெற்றி கொண்டனர். இதன் பின்னணியில் இருந்தவர் தமிழகத்தை சேர்ந்த சமையற் கலைஞர் அருண்

வாஷிங்டன்: கொரோனாவுக்கு எதிர்ப்புசக்தியை அளித்து வரும் தமிழகத்தின் ரசம் அமெரிக்காவை கலக்கி வருகிறது.latest tamil newsஉலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று அமெரிக்காவை பெரிதும் பாதித்தது. இந்நிலையில் நியூயார்க், நியூஜெர்சி, பிரின்ஸ்டன் ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் கொரோனாவை வெற்றி கொண்டனர். இதன் பின்னணியில் இருந்தவர் தமிழகத்தை சேர்ந்த சமையற் கலைஞர் அருண் ராஜதுரை.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டி யை சேர்ந்த இவர் திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்த உடன் நியூஜெர்சிக்கு குடிபெயர்ந்தார். அங்குள்ள ரெஸ்டாரண்டில் பணிபுரிந்து வந்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா அதிகரித்த போது இவர் மஞ்சள், இஞ்சி, பூண்டு சேர்த்து தயாரித்த ரசத்தை அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிக்கு வழங்கி வந்தார். அவர்களின் உடல் நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வந்தது.இதனையடுத்து இவர் பணி புரியும் நிறுவனத்தில் ரசம் இன்றியமையாத மெனுவாக மாறி உள்ளது.

இவர் பணிபுரியும் நிறுவனத்தின்நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் கனடா கிளைகளில் ரசம் மெனு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது நாள் ஒன்றிற்கு சுமார் 500 முதல் 600 கப் ரசம் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து அருண் ராஜதுரை கூறுகையில் இது ஒரு வெற்றியாக அமையும் என நாங்கள் ஒரு போதும் நினைத்ததில்லை என கூறி உள்ளார்.


latest tamil newsகடந்த 2018 ம் ஆண்டு சிறந்த தென் கிழக்கு ஆசிய சமையற் கலைஞர் விருது அருண் ராஜதுரைக்கு வழங்கப்பட்டது . கொரோனாவை சமாளிக்க அமெரிக்கா ஒரு மருத்துவ அதியசத்தை கொண்டு வரும் என உலகம் நம்புகிறது. அதே வேளையில் நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் பிரின்ஸ்டனில் வசிப்பவர்கள் கொரோனாவை வெல்ல தென்னிந்திய உணவை ஆதரிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - chennai,இந்தியா
10-டிச-202019:21:34 IST Report Abuse
sankar ஆவி பிடித்தாலும் லெமன் பூண்டு மிளகு ரசம் குடித்தாலும் மூக்கு தொண்டையில் உள்ள கிருமிகள் எல்லாம் ஓடிவிடும் செய்து பாருங்கள்
Rate this:
Cancel
Murugan - tokyo,ஜப்பான்
04-டிச-202017:54:47 IST Report Abuse
Murugan what is wrong
Rate this:
Cancel
Murugan - tokyo,ஜப்பான்
04-டிச-202017:53:51 IST Report Abuse
Murugan HOWEVER there is no doubt in Rasam. It's a good soup and it will definitely prevent some of the decease for sure
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X