சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

பாடம் புகட்ட தயார்?

Added : டிச 03, 2020
Share
Advertisement
பாடம் புகட்ட தயார்?'இவருக்கு நம் தலைவர் மீது, ஏன் இவ்வளவு கோபம் என தெரியவில்லையே' என, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பற்றி ஆச்சரியப்படுகின்றனர், உத்தர பிரதேச முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான யோகி ஆதித்யநாத்தின் ஆதரவாளர்கள். சமீபத்தில் நடந்து முடிந்த பீஹார் சட்டசபை தேர்தலின்போது, பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார் ஆதித்யநாத்.இதை, மஹாராஷ்டிராவில்

அக்கம் பக்கம்

பாடம் புகட்ட தயார்?

'இவருக்கு நம் தலைவர் மீது, ஏன் இவ்வளவு கோபம் என தெரியவில்லையே' என, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பற்றி ஆச்சரியப்படுகின்றனர், உத்தர பிரதேச முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான யோகி ஆதித்யநாத்தின் ஆதரவாளர்கள். சமீபத்தில் நடந்து முடிந்த பீஹார் சட்டசபை தேர்தலின்போது, பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார் ஆதித்யநாத்.இதை, மஹாராஷ்டிராவில் ஆளும் கட்சியாக உள்ள சிவசேனாவின் சஞ்சய் ராவத், கடுமையாக கிண்டலடித்தார். 'ஆதித்யநாத்துக்கும், பீஹாருக்கும் என்ன தொடர்பு உள்ளது... ஆளே இல்லாத கடையில், இவர் எதற்கு டீ ஆத்தப் போகிறார்' என்றார்.ஆனால், பீஹாரில், ஆதித்யநாத் பிரசாரம் செய்த தொகுதிகள் பெரும்பாலானவற்றில், பா.ஜ., வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இது, சஞ்சய் ராவத்துக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்க கூடும். இதைத் தொடர்ந்து, லக்னோவில் பிரமாண்ட திரைப்பட நகரத்தை அமைக்க திட்டமிட்டுள்ள யோகி ஆதித்யநாத், பாலிவுட் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்களை சந்தித்து, ஆதரவு திரட்ட, மும்பை செல்லவுள்ளார்.
இதைக்கேள்விப்பட்ட சஞ்சய் ராவத், 'பாலிவுட்டின் தலைநகரம் மும்பை தான்; அதை லக்னோவுக்கு மாற்ற, ஆதித்யநாத் முயற்சிக்கிறார். அவர் தலைகீழாக நின்றாலும், அது நடக்காது' என, சீறினார். ஆதித்யநாத்தும், அவரது ஆதரவாளர்களும், 'எதற்கெடுத்தாலும், நம் விஷயத்தில் இவர் மூக்கை நுழைக்கிறாரே... இவருக்கு சரியான பாடம் புகட்டினால் தான் சரியாக வருவார்' என, கொதிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X