சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

உதயநிதிக்கு பாடம் எடுக்கணும்!

Added : டிச 03, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
உதயநிதிக்கு பாடம் எடுக்கணும்!எம்.எல்.ராகவன், பணிநிறைவு பெற்ற இயற்பியல் பேராசிரியர், திருப்பூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க-., இளைஞர் அணி செயலர் உதயநிதியின் பொறுப்பற்ற, மிரட்டலான பேச்சு, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த உதயநிதி, கட்சி நிர்வாகிகளிடம் பேசுகையில், 'அவரு தான், ஸ்பெஷல் டி.ஜி.பி.,

இது உங்கள் இடம்

உதயநிதிக்கு பாடம் எடுக்கணும்!

எம்.எல்.ராகவன், பணிநிறைவு பெற்ற இயற்பியல் பேராசிரியர், திருப்பூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க-., இளைஞர் அணி செயலர் உதயநிதியின் பொறுப்பற்ற, மிரட்டலான பேச்சு, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த உதயநிதி, கட்சி நிர்வாகிகளிடம் பேசுகையில், 'அவரு தான், ஸ்பெஷல் டி.ஜி.பி., ராஜேஷ் தாஸ்; பேரெல்லாம் ஞாபகம் வச்சிருப்போம். இன்னும் ஐந்து மாதம் தான் இருக்கு... எங்களுக்கு தெரியாத காவல்துறையா...' என, மிரட்டல் விடுத்தார்.
இது, போலீசாரிடம் மட்டுமின்றி, அனைத்து அரசு துறைகளின் அதிகாரிகள் மத்தியிலும், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.மக்கள் மீது அக்கறை உள்ள, அரசியல் கட்சியாக, தி.மு.க.,வினர் என்ன செய்திருக்க வேண்டும்?நம் மாநிலத்திற்கு சேர வேண்டிய, ஜி.எஸ்.டி., வருவாய் நிலுவைத் தொகையை, வெகுகாலமாக மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது; அதற்காக, தி.மு.க., போராடியிருக்க வேண்டும்.திருச்சி - -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊர்களைப் பற்றிய அறிவிப்பு, தொலைவு குறித்த விபரம் அனைத்தும், ஹிந்தியில் மட்டுமே உள்ளது. இந்த, கட்டாய ஹிந்தித் திணிப்பை அழித்து, போராடியிருக்க வேண்டும்.
மத்திய அரசு, ஹிந்தி தெரியாத அரசு அலுவலர்களுக்கு, ஹிந்தியில் கடிதம் அனுப்புவது எல்லாமே, மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளை உசுப்பேற்றும் செயல் தானே... இவற்றை எதிர்த்து, உதயநிதி களமிறங்கி இருக்க வேண்டும்.இவற்றில் எல்லாம் அக்கறை காட்டாமல், அரசு அதிகாரிகளை மிரட்டுவது, அநாகரிகம் மட்டுமல்ல; அத்துமீறலும் ஆகும்.உதயநிதியின் இந்த பொறுப்பற்ற பேச்சால், கட்சி சார்பற்ற மக்களின் ஆதரவை, தி.மு.க., இழக்க நேரிடும்.தேர்தல் நெருங்கும் நேரத்தில், ஆளுங்கட்சி மீது அதிருப்தியில் உள்ள மக்களை, அரவணைத்துக் கொள்ளும் ராஜதந்திரம், தி.மு.க.,வுக்கு கைவரவில்லை. வேலியில் ஓடும் ஓணானைத் தேடிப்பிடித்து, வேட்டிக்குள் விடுவது போல, உதயநிதி நடந்து கொள்ளக் கூடாது.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மூத்த தலைவர்கள் பலரை ஓரம்கட்டி, அரசியல் அனுபவம் இல்லாத, இளையவரான, தன் மகன் உதயநிதிக்கு, கட்சியில் அதிக முக்கியத்துவம் தந்ததால், இப்படியான பேச்சு வெளிவருகிறது.மக்களையும், அதிகாரிகளையும் மிரட்டுவது, இன்று செல்லுபடி ஆகாது. நம்பிக்கை தரக்கூடிய, அர்த்தமுள்ள, ஆதாரபூர்வமான பேச்சு திறன் தான், அரசியல்வாதிக்கு முக்கியம்.
'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' குறித்து, உதயநிதிக்கு யாராவது பாடம் நடத்தினால் பரவாயில்லை.

ஊரான் வீட்டுநெய்யே!

சீனி சேதுராமன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கோவில் நிலத்தில் கட்டப்பட்டு வரும், கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் தொடர்பான பிரச்னை, 'ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே' என்ற கிராமத்து சொலவடையை நினைவுபடுத்துவது போல உள்ளது.புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, கலெக்டர் அலுவலகம் அமைக்க, வீரசோழபுரம் எனும் இடத்தில், அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 35 ஏக்கர் நிலத்தை, அரசுக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.பலத்த எதிர்ப்பு கிளம்பியும், அரசு அசைந்து கொடுக்கவில்லை. கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், துவங்கிய கட்டுமான பணிகள், நீதிமன்ற தடை உத்தரவால், தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது.'ஊருக்கு இளைத்தவன், பிள்ளயார் கோவில் ஆண்டி' என்பது போல, அரசின் திட்டம் செயல்படுத்தும் போது, நீர் நிலை மற்றும் ஹிந்து கோவில்களுக்கு சொந்தமான இடங்கள் மட்டுமே அபகரிக்கப்படுகின்றன.நீர்நிலை மற்றும் கோவில் இடங்களை கபளீகரம் செய்வது, திராவிட ஆட்சியில் தொடர்ந்து நடந்து வருகிறது.தமிழக அரசு, உண்மையான சந்தை மதிப்பு கொடுத்து, தேவையான நிலத்தை, உரிமையாளர்களிடம் இருந்து பெறலாம்; அதற்கு, சட்டரீதியான சிக்கலை, அரசு சந்திக்க வேண்டும்.அதனால் என்ன, நிலம் கிரயம் செய்வதில் நடக்கும் மோசடிகளை, அதன் வழியாக சரி செய்ய முடியுமே!நம் முன்னோர், தர்மம் செழிக்க, கோவில்களுக்கு தானமாக கொடுத்த சொத்தை அழிக்காமல், பாதுகாக்க வேண்டிய கடமை, அரசுக்கு உள்ளது.


இதில் என்னபெருமை?வி.எம்.கலைப்பித்தன், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: ஏழாவது முறையாக, நிதிஷ் குமார் பீஹார் முதல்வராக பதவியேற்றுள்ளார் என்பது, மகிழ்ச்சி அளிக்கவில்லை. காரணம், பீஹாரின் நிலை அப்படி!பீஹாரில் இன்னும் பல கிராமங்களில் பள்ளி, சாலை, மின்சாரம், குடிநீர் வசதிகள் ஏதும் இல்லை. பின்தங்கிய மாநிலமாகத் தான் உள்ளது.இத்தனை முறை, முதல்வர் பதவியில் அமர்ந்தாலும், மக்களின் வாழ்வாதரத்தை உயர்த்த முடியவில்லையே... அதை அவர், இம்முறை நிவர்த்தி செய்ய
வேண்டும். இனி மேலும், அவர் வாய்ப்பு கேட்கக் கூடாது.தமிழகத்தில் கூட, தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி, ஐந்து முறையும்; அ.தி.மு.க., முன்னாள் பொதுச்செயலர் ஜெயலலிதா, நான்கு முறையும் முதல்வராக அமர்ந்துள்ளனர்.அப்படி இருந்தும், பெரும் முன்னேற்றத்தை, தமிழகம் காணவில்லை.'பிணி இன்மை, செல்வம், விளைபொருட்கள் வளம், இன்ப வாழ்வு, நல்ல காவல்' என, ஒரு நாட்டிற்கு ஐந்து வளங்கள் வேண்டும் என்று சொன்னார், வள்ளுவர்.
அந்த இலக்கணத்தில் பார்த்தால், தமிழகத்தில், காமராஜர் ஆட்சியில் மட்டுமே, 60 சதவீதம் நிறைவு எட்டப்பட்டது.நாம், அவரை தோற்கடித்து, தமிழகத்தை திராவிடக் கட்சிகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்து விட்டோம். அவர்கள் லஞ்சம், ஊழலில் மூழ்கி விட்டனர்.முன்னாள் முதல்வர் காமராஜர் இறக்கும்போது, அவரிடம் இருந்தது, வெறும், 5,000 ரூபாய் மட்டுமே. இப்போதுள்ள அரசியல்வாதிகளின் சொத்து மதிப்பை கேட்டால், மயக்கமே வரும்.ஆகையால், எத்தனை காலம் ஆட்சியில் இருந்தார் என்பது, கேள்வி இல்லை; அவர், எப்படி ஆட்சி செய்தார் என்பதே முக்கியம்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madhusoodhana Ramachandran - Chennai,இந்தியா
04-டிச-202015:37:03 IST Report Abuse
Madhusoodhana Ramachandran ஊழலுக்கு மக்கள் பழகி விட்டனர். கொடுத்து டான் தங்கள் உரிமையை பெறவேண்டும் என்ற காலப்போக்கில் மக்கள் அதற்க்கு உடன் பட்டுவிட்டார்கள் அரசாங்க அலுவலரும் அரசியல் வாதிகளும் பிணைந்து ஊழலை தொழிலாக செய்து கொண்டிருக்கிறார்கள். காலத்தின் கோலம். காமராஜை வசை பாடிய கும்பல் கொழுத்து வளர்ந்து விட்டது. அதற்க்கு பதவியில் இல்லை என்றல் கை நமச்சல் /ஊறல் எடுக்கிறது.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
04-டிச-202007:16:33 IST Report Abuse
Darmavan தொடர்பு மொழியாக ஹிந்தி இருக்கும் என்றால் ஹிந்தியில்தான் பிற மாநில மத்திய அரசின் கடிதங்கள் இருக்கும்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
04-டிச-202006:20:02 IST Report Abuse
D.Ambujavalli என்ன உளறினாலும், எல்லை மீறி காவல் துறை அதிகாரிக்கு பயமுறுத்தல் விட்டாலும், என்னவோ கட்சியில் நல்ல பேச்சாளர்கள் இல்லாதது போல் இந்த அரைகுறையை இறக்கிவிட்டு வரும் பத்து வோட்டுக்கும் வெட்டு வைக்கும் நிலைதான் கட்சிக்கு வரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X