டிச., 4, 1976
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில், 1900 ஆக., 15ம் தேதி பிறந்தவர், ந.பிச்சமூர்த்தி. இயற்பெயர், வேங்கட மகாலிங்கம்.தத்துவம் மற்றும் சட்டத்தில் பட்டம் பெற்றவர் வழக்கறிஞராகவும், ஹிந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணிபுரிந்தார். 'நவ இந்தியா, சுதேசமித்திரன், சுதந்திர சங்கு, தினமணி, மணிக்கொடி' போன்ற பத்திரிகைகளில், இவரது எழுத்துகள் வெளிவந்தன. முதலில் ஆங்கிலத்தில், சிறுகதைகள் எழுதினார். தமிழில் சிறுகதை எழுதத் துவங்கியவர், புதுக்கவிதைக்கு மாறினார். 1934 முதல், 1944 வரை புதுக்கவிதைகள் எழுதினார். பின், 15 ஆண்டுகள் எதுவும் எழுதவில்லை. மீண்டும், 1959 முதல், தன் இறுதி நாள் வரை எழுத்து துறையில் இயங்கினார். கவிதை, சிறுகதை, கட்டுரை, சிறுவர் கதைகள், நாடகங்கள் படைத்துள்ளார்.ஸ்ரீராமானுஜர் என்ற படத்தில், ஆளவந்தார் வேடமேற்று, நடித்திருக்கிறார். 1976 டிச., 4ம் தேதி, தன், 76வது வயதில் இயற்கை எய்தினார்.'தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை' ந.பிச்சமூர்த்தி காலமான தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE