முக கவசத்தை கட்டாயமாக்கலாமா? யோசனை கேட்கிறது உச்ச நீதிமன்றம்

Updated : டிச 05, 2020 | Added : டிச 03, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி : கொரோனா பரவலை தடுக்க, முக கவசம் அணிவதை கட்டாயமாக்குவது குறித்து, யோசனை தெரிவிக்கும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தில், கொரோனா நோயாளிகளுக்கு சரிவர சிகிச்சை அளிக்காமல், உயிரிழந்தோரின் உடல்களை முறையாக கையாளாமல் உள்ள மருத்துவமனைகள் குறித்து, உச்ச நீதிமன்றம், தானே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து
முக கவசத்தை கட்டாயமாக்கலாமா?  யோசனை கேட்கிறது உச்ச நீதிமன்றம்!

புதுடில்லி : கொரோனா பரவலை தடுக்க, முக கவசம் அணிவதை கட்டாயமாக்குவது குறித்து, யோசனை தெரிவிக்கும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹிமாச்சல பிரதேசத்தில், கொரோனா நோயாளிகளுக்கு சரிவர சிகிச்சை அளிக்காமல், உயிரிழந்தோரின் உடல்களை முறையாக கையாளாமல் உள்ள மருத்துவமனைகள் குறித்து, உச்ச நீதிமன்றம், தானே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில், நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பிறப்பித்த உத்தரவு:கொரானா பரவல் தடுப்பு விதிமுறைகளை, மக்கள் மதிக்காமல் இருப்பது கவலை அளிக்கிறது.
முக கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதையும், கட்டாயம் ஆக்க வேண்டும். அதற்கான யோசனையை, மத்திய அரசும், மற்றவர்களும் தெரிவிக்கலாம். ஹிமாச்சல பிரதேச அரசு, மருத்துவமனைகளில், கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளையும், அதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Surabhi -  ( Posted via: Dinamalar Android App )
04-டிச-202022:49:13 IST Report Abuse
Surabhi nice aunty in the picture
Rate this:
Cancel
04-டிச-202020:33:26 IST Report Abuse
kulandhai Kannan ஏற்கனவே கோர்ட்டுகளின் உத்தரவால் தலைகவச உபத்திரவம். இப்போது இதுவேறா?
Rate this:
Cancel
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
04-டிச-202017:46:48 IST Report Abuse
RaajaRaja Cholan முக கவசமோ பிற கவசமோ சரியாக பயன்படுத்தினால் எல்லாம் நன்மைக்காவே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X