அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஊழல் குறித்து பேச ஸ்டாலினுக்கு தகுதியில்லை

Updated : டிச 05, 2020 | Added : டிச 03, 2020 | கருத்துகள் (36+ 18)
Share
Advertisement
சேலம்: ''அ.தி.மு.க., அரசில் ஊழல் என, ஸ்டாலின் தினமும் அறிக்கை விடுகிறார். ஊழலுக்காக, கலைக்கப்பட்டது என்றால், அது தி.மு.க., ஆட்சிதான். அதனால், ஊழல் குறித்து பேச, ஸ்டாலினுக்கு தகுதியில்லை,'' என, முதல்வர், இ.பி.எஸ்., தெரிவித்தார்.சேலம் பயணியர் மாளிகையில், மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து, நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற முதல்வர், இ.பி.எஸ்., அளித்த
ஊழல் குறித்து பேச தகுதியில்லை :ஸ்டாலின் ,முதல்வர் பாய்ச்சல்

சேலம்: ''அ.தி.மு.க., அரசில் ஊழல் என, ஸ்டாலின் தினமும் அறிக்கை விடுகிறார். ஊழலுக்காக, கலைக்கப்பட்டது என்றால், அது தி.மு.க., ஆட்சிதான். அதனால், ஊழல் குறித்து பேச, ஸ்டாலினுக்கு தகுதியில்லை,'' என, முதல்வர், இ.பி.எஸ்., தெரிவித்தார்.

சேலம் பயணியர் மாளிகையில், மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து, நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற முதல்வர், இ.பி.எஸ்., அளித்த பேட்டி:

அ.தி.மு.க., அரசில் ஊழல் என, ஸ்டாலின் தினமும் அறிக்கை விடுகிறார். ஊழலுக்காக கலைக்கப்பட்டது என்றால், அது தி.மு.க., ஆட்சிதான். அதனால், ஊழல் குறித்து பேச ஸ்டாலினுக்கு தகுதியில்லை. அ.தி.மு.க., ஆட்சியில், அனைத்து திட்டப் பணிகளும் விதிமுறைப்படிதான் நடக்கின்றன. மீத்தேன் திட்டத்தை கொண்டு வர ஒப்பந்தம் போட்டது, தி.மு.க., அதை நாங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றியுள்ளோம். வேளாண் சட்டத்தில், தமிழகத்தில் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. முகவர்களிடம் இருந்து காப்பாற்றி, அதிக லாபத்தை கொடுக்கிறது.கனிமொழி பிரசாரத்தை, என் தொகுதியில் தொடங்குவதாக கூறி, நான் எதுவும் செய்யவில்லை என பேசியுள்ளார். இதுவரை இல்லாத அளவு, என் தொகுதியில் நலத்திட்ட பணிகள் நடந்துள்ளன. இதை மக்களிடம் கேட்டாலே தெரியும்.

பா.ம.க., செயல்பாட்டை பொறுத்தவரை, கூட்டணி கட்சியாக இருந்தாலும், கொள்கைகள் வேறு. அதை, அவர்கள் விட்டுக் கொடுக்க முடியாது. நாங்களும் தலையிட முடியாது. ஜனநாயக அடிப்படையில் செயல்படும் கூட்டணியாகவே நாங்கள் இருக்கிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (36+ 18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
04-டிச-202020:29:06 IST Report Abuse
K.n. Dhasarathan ஊழல் பற்றி பேச ஆ. தி மு க விற்கு தகுதி இருக்கிறதா ? ஊழல் செய்து முதல்வர் பதவியில் இருக்கும்போதே சிறைக்கு அனுப்பப்பட்டவர் ஜெயலலிதா, உயிரோடு இருந்தால் சிறையில் இருந்திருக்க வேண்டும், நுறு கோடி அபராதம் கட்டியிருக்க வேண்டும், ஒரு அமைச்சர் விடாமல் அனைவர் மேலும் ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது, ஏன் இப்போதைய முதல்வர் மீதும் ஏகப்பட்ட ஊழல் வழக்குகள், உங்கள் கட்சியில் உள்ள ஒருவருக்கும் ஊழல் பற்றி பேச தகுதி இருக்கிறதா என்பதுதான் மக்கள் கேள்வி .
Rate this:
M.Selvam - Chennai/India,இந்தியா
04-டிச-202022:47:01 IST Report Abuse
M.Selvamஒருத்தராவது உண்மையை இங்கே சொல்வது ஆறுதல்..ஊழல் ஆட்சியை தாங்கி பிடிப்பது ஊழல் ஒழிப்பாளர்கள் என்று மார் தட்டிக் கொள்ளும் ஒரு தேசியக் கட்சி என்பது அவர்களின் உண்மை சொரூபத்தை சொல்லும்...
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
04-டிச-202019:10:21 IST Report Abuse
RajanRajan ஊழல் தகுதி என்று பார்த்தால் இரு திராவிட கட்சிகளுமே உலகமகா விஞான நூதன ஊழல் வித்வான்களின் கேந்திரங்கள் என்பது ஊரறிந்த விஷயமாகும். ஒருத்தனுக்கு ஒருத்தன் சளைத்தவன் அல்ல தான். ஆனால் இப்பத்த போட்டி ஒருத்தன் சுதந்திரமா ஊழல் பண்ணுறான் இன்னொருத்தன் அதற்கு வழி இல்லாமல் எதிர்க்கட்சி பங்கும் வரமாட்டேங்குதே எனும் ஒரு அங்கலாய்ப்பு புலம்பல் அம்புட்டுதான். ஊழல்ன்னாலே கூட்டு கும்மியடிப்பானுங்க குஷியா.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
04-டிச-202016:31:44 IST Report Abuse
Anand ஊழல் மட்டுமல்ல எதைப்பற்றியும் பேச தகுதியற்ற பேர்வழி.... அதுமட்டுமல்ல நீங்கள் ஏற்கனவே சுடலையை பார்த்து கேட்ட கேள்வி "இதுநாள் வரை நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்", இதுவரை அதற்கு அவரிடமிருந்து பதில் இல்லை.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X