பொது செய்தி

இந்தியா

10, பிளஸ் 2 மாணவர்களுக்காக பள்ளிகளை திறக்கக்கோரி கடிதம்

Added : டிச 03, 2020
Share
Advertisement
புதுடில்லி:நாடு முழுதும், 10 மற்றும், பிளஸ் 2 மாணவர்களுக்காக, அடுத்த மாதம் முதல் பள்ளிகளை திறக்கக்கோரி, அனைத்து மாநில முதல்வர்களுக்கும், இந்திய பள்ளிச் சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில், கடிதம் எழுதியுள்ளது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுதும் உள்ள பள்ளிகள், மார்ச்சில் மூடப்பட்டன. பெரும்பாலான மாநிலங்களில், இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை.

புதுடில்லி:நாடு முழுதும், 10 மற்றும், பிளஸ் 2 மாணவர்களுக்காக, அடுத்த மாதம் முதல் பள்ளிகளை திறக்கக்கோரி, அனைத்து மாநில முதல்வர்களுக்கும், இந்திய பள்ளிச் சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில், கடிதம் எழுதியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுதும் உள்ள பள்ளிகள், மார்ச்சில் மூடப்பட்டன. பெரும்பாலான மாநிலங்களில், இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை.


'ஆன்லைன்'



இந்நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுக்கும், தலைமை தேர்தல் ஆணையத்திற்கும், சி.ஐ.எஸ்.சி.இ., எனப்படும், இந்திய பள்ளிச் சான்றிதழ் தேர்வு கள் கவுன்சில், கடிதம் அனுப்பி வைத்துள்ளது. அதன் தலைமை அதிகாரியும், செயலருமான ஜெர்ரி அராத்துான் எழுதிய அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மார்ச் முதல் இன்று வரை, அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.

அப்படி மூடப்பட்டிருந்தாலும், பெரும்பாலான பள்ளிகளில், 'ஆன்லைன்' வாயிலாக, வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.எனினும், பொதுத் தேர்வுகளுக்கு, மாணவர்கள் தயாராக வேண்டியது அவசியம். எனவே, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும், பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கவேண்டும். குறிப்பாக, 10 மற்றும், பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, ஜன., முதல், சராசரி வகுப்புகளை துவங்க வேண்டும்.


பொதுத் தேர்வு



பள்ளிகள் திறக்கப்பட்டதும், 'பிராக்டிக்கல் மற்றும் பிராஜக்ட்' வேலைகளில், மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவர். பாடங்களில் சந்தேகம் இருக்கும் மாணவர்கள், ஆசிரியர்களிடம் கேட்டு, அதை தெளிவுபடுத்திக்கொள்ளவும், அந்த நேரம் உதவியாக இருக்கும். பள்ளி திறக்க அனுமதி கிடைத்ததும், அரசு வெளியிட்ட வழிமுறைகளை பின்பற்றவேண்டும் என, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்படும். வைரஸ் பரவலை தடுக்கும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும், பள்ளி களில் மேற்கொள்ளப்படும்.

இதேபோல், அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடக்க இருக்கும் மாநிலங்களில், தேர்தல் நடக்கும் தேதிகள் குறித்த விபரங்களை, தலைமை தேர்தல் ஆணையர் தெரிவிக்க வேண்டும். அதற்கேற்ப, ஐ.சி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும், ஐ.எஸ்.சி., பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் திட்டமிடப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X