புதுடில்லி:கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை, 89.73 லட்சமாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, குணமடைந்தோர் விகிதம், 94.11 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை, வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த, 24 மணி நேரத்தில், கொரோனா வைரசால், 35 ஆயிரத்து, 551 பேர், பாதிக்கப்பட்டனர். சிகிச்சைஇதையடுத்து, நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 95 லட்சத்து, 34 ஆயிரத்து, 964 ஆக உயர்ந்துள்ளது.இதில், நான்கு லட்சத்து, 22 ஆயிரத்து, 943 பேர், சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சிகிச்சைப் பெறுவோர் விகிதம், 4.44 சதவீதமாக குறைந்து காணப்படுகிறது.கடந்த, ஒரே நாளில், 40 ஆயிரத்து, 726 பேர், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டனர். இதைஅடுத்து, மீண்டோர் எண்ணிக்கை, 89 லட்சத்து, 73 ஆயிரத்து, 373 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம், 94.11 சதவீதமாக உயர்ந்துள்ளது.கடந்த, 24 மணி நேரத்தில், 526 பேர், கொரோனாவால் நாடு முழுதும் உயிரிழந்தனர். இதில், அதிகபட்சமாக, மஹாராஷ்டிராவில், 111 உயிரிழப்புகள் பதிவாகின.
உயர்வு
டில்லியில், 82; மேற்கு வங்கத்தில், 51; ஹரியானாவில், 32; உத்தர பிரதேசத்தில், 29; கேரளாவில், 28; சத்தீஸ்கரில், 27; பஞ்சாபில், 21 உயிரிழப்புகளும் பதிவாகின. இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 38 ஆயிரத்து, 648 ஆக உயர்ந்துஉள்ளது. எனினும், இறப்பு விகிதம், 1.45 சதவீதமாக குறைந்து காணப்படுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE