மதமாற்ற தடை சட்டம் உ.பி.,யில் முதல் கைது

Added : டிச 03, 2020
Share
Advertisement
பரேலி:உத்தர பிரதேசத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள, கட்டாய மதமாற்றம் தடை சட்டத்தின் கீழ், முதல் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. திருமணம் செய்வதற்காக, பெண்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வதை தடுக்கும் வகையில், சமீபத்தில் அவசர சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.இந்த சட்டத்தின்படி,

பரேலி:உத்தர பிரதேசத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள, கட்டாய மதமாற்றம் தடை சட்டத்தின் கீழ், முதல் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. திருமணம் செய்வதற்காக, பெண்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வதை தடுக்கும் வகையில், சமீபத்தில் அவசர சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.இந்த சட்டத்தின்படி, கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்தால், 10 ஆண்டு சிறை, 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும்.

இந்த சட்டத்தின்கீழ், பரேலி மாவட்டத்தில், முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தன் மகளை மதம் மாறி திருமணம் செய்யும்படி, அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர், ஓவாயிஸ் அஹமது மிரட்டுவதாக, அந்தப் பெண்ணின் தந்தை புகார் அளித்திருந்தார்.தலைமறைவாக இருந்த ஓவாயிஸ் அஹமது, கைது செய்யப்பட்டுள்ளார். அவரை, 14 நாட்கள் காவலில் வைக்க, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X