புதுடில்லி:''இந்தியாவின் எழுச்சி, யாருக்கும் அச்சுறுத்தல் அல்ல; அதே போல், நம்மையும் யாரும் அச்சுறுத்த முடியாது,'' என, ராணுவ செயலர் அஜய்குமார் தெரிவித்தார்.
'வீடியோ கான்பரன்ஸ்'
டில்லியில் உள்ள, மனோகர் பரிக்கர் ராணுவ கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ராணுவ செயலர் அஜய்குமார் பேசியதாவது: நம் கடல் மற்றும் தேசிய நலன்களுக்காக, அண்டை நாடுகளுடன் ஸ்திரத்தன்மையை பராமரிக்க வேண்டும். இந்திய பெருங்கடல் பகுதியில் மட்டுமல்லாமல், இந்தோ- - பசிபிக் கடல் பகுதியிலும் விதிகள் அடிப்படையிலான ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்.
இந்தியாவின் எழுச்சி, யாருக்கும் அச்சுறுத்தல் அல்ல; அதே போல், எங்களையும் யாரும் அச்சுறுத்த முடியாது.நம் ராணுவ உறவு என்பது, சுதந்திரமான, வெளிப்படை தன்மையுடைய விதிகளை பின்பற்ற கூடியது. இதன் வாயிலாக, 130 கோடி இந்திய மக்களின் பொருளாதார வளர்ச்சி உறுதிப்படுத்தப்படுவதுடன், இந்த பிராந்தியத்தின், 200 கோடி மக்கள் கனவும் நிறைவேறும்.
சமீபத்தில், ஒரே கருத்துடைய நாடுகளுடனான நம் நட்பு அதிகரித்துள்ளது. மேலும், மலபார் பயிற்சி போன்ற சில முக்கிய பயிற்சிகளும், ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி இருப்பது, நம் செயல்பாட்டை அதிகரிக்க உதவும்.இவ்வாறு, அவர் பேசினார்.
சமாளிப்போம்
கடற்படை தினத்தை முன்னிட்டு, கடற்படை தலைமை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங், செய்தியாளர்களிடம் நேற்று கூறிய தாவது:இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்படும் அத்துமீறல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள, நிலையான செயல்திட்டங்களை, நம் படையினர் வகுத்துள்ளனர்.கிழக்கு லடாக் பகுதியில், நம் கடற்படையின் கண்காணிப்பு விமானங்களான, 'பி8ஐ' மற்றும் 'ஹீரோன்' ஆளில்லா கண்காணிப்பு விமானங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
கடற்படையின் அனைத்து நடவடிக்கைகளும், ராணுவம் மற்றும் விமானப்படையுடனான ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு வருகின்றன.நம் கடல் பகுதிகளில், சீனா உட்பட, பல்வேறு நாடுகளிடம் இருந்து அச்சுறுத்தல்களை, நம் படையினர் எதிர்கொண்டு வருகின்றனர். அதை திறம்பட சமாளிக்க, நம் படையினர் தயாராக உள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
'அச்சுறுத்தல்களை சமாளிப்போம்'
கடற்படை தினத்தை முன்னிட்டு, கடற்படை தலைமை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்படும் அத்துமீறல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள, நிலையான செயல்திட்டங்களை, நம் படையினர் வகுத்து உள்ளனர்.கிழக்கு லடாக் பகுதியில், நம் கடற்படையின் கண்காணிப்பு விமானங்களான, 'பி8ஐ' மற்றும் 'ஹீரோன்' ஆளில்லா கண்காணிப்பு விமானங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கடற்படையின் அனைத்து நடவடிக்கைகளும், ராணுவம் மற்றும் விமானப்படையுடனான ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு வருகின்றன.நம் கடல் பகுதிகளில், சீனா உட்பட, பல்வேறு நாடுகளிடம் இருந்து அச்சுறுத்தல்களை, நம் படையினர் எதிர்கொண்டு வருகின்றனர். அதை திறம்பட சமாளிக்க, நம் படையினர் தயாராக உள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE