சென்னை:'ஆவின் சேவையால், விவசாயிகளின் கையில், தினமும், 17 கோடி ரூபாய் பணம் புழங்குகிறது' என, ஆவின் மேலாண் இயக்குனர் வள்ளலார் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:
தமிழகத்தில், கூட்டுறவு அமைப்பின் கீழ், 20 லட்சம் மொத்த பால் உற்பத்தியாளர்கள் உள்ளனர். கூட்டுறவு அமைப்பின் கீழ் உற்பத்தி செய்யப்படும் பால், 9,325 பால் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக கொள்முதல் செய்யப்படுகிறது.தமிழகத்தில், பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, அவர்கள் வழங்கும் பாலுக்கு, அரசு அறிவித்த நியாயமான விலை கிடைக்கிறது.
மேலும், கால்நடைகளுக்கு தேவைப்படும், சரிவிகித கால்நடை தீவனமும், மத்திய அரசின் விவசாயிகள் காப்பீடு திட்டம் மற்றும் கால்நடை மருத்துவ உதவிகளை, ஆவின் வழியே, விவசாயிகளுக்கு அளித்து சிறப்பாக செயல்படுகிறது.தமிழகத்தில், தினசரி பால் உற்பத்தி, 2.10 கோடி லிட்டர். இவற்றில், ஆவின் கூட்டுறவு சங்கங்களால், 40 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்பட்டு வருகிறது.
பால் தொழில் வழியே, ஆவினில் ஆண்டுக்கு, 6,500 கோடி ரூபாய் வரை, பண பரிவர்த்தனை நடக்கிறது. இதன்படி தினமும், 17 கோடி ரூபாய் என, தமிழக விவசாயிகளின் கையில் புழங்குகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தில், ஆவின் நேரடி பங்கு வகிக்கிறது.இவ்வாறு, வள்ளலார் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE