மக்கள் பயன்பாடின்றி வீணாகும் கிராம சேவை மைய கட்டடங்கள்

Added : டிச 03, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, நஞ்சேகவுண்டன்புதுாரில், 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு, பூட்டி கிடக்கும் கிராம சேவை மைய கட்டடத்தை புதர் சூழ்ந்துள்ளது.தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை சார்பில், கடந்த, 2015 - 16ம் ஆண்டுகளில், ஊராட்சிக்கு ஒரு கிராம சேவை மைய கட்டடம், 17 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. சில கிராமங்களில், ரோட்டோர நீர் நிலைகள் ஆக்கிரமிப்பிலும்
 மக்கள் பயன்பாடின்றி வீணாகும் கிராம சேவை மைய கட்டடங்கள்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, நஞ்சேகவுண்டன்புதுாரில், 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு, பூட்டி கிடக்கும் கிராம சேவை மைய கட்டடத்தை புதர் சூழ்ந்துள்ளது.தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை சார்பில், கடந்த, 2015 - 16ம் ஆண்டுகளில், ஊராட்சிக்கு ஒரு கிராம சேவை மைய கட்டடம், 17 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. சில கிராமங்களில், ரோட்டோர நீர் நிலைகள் ஆக்கிரமிப்பிலும் கட்டப்பட்டுள்ளது. சில கிராமங்களில் 'ரிசர்வ்' இடங்களிலும் கட்டப்பட்டுள்ளது.சில ஊராட்சிகளில், இக்கட்டடத்தை பாதுகாக்க, சுற்றுச்சுவரும் அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கிராமங்களில் இக்கட்டடங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. மாறாக, சில கிராமங்களில், கிராம நிர்வாக அலுவலகம், ரேஷன்கடை, அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.ஒன்றியத்தில், 39 ஊராட்சிகளில் கட்டப்பட்ட கட்டடங்களில், பெரும்பாலானவை புதர் சூழ்ந்து, பயன்பாட்டில் இன்றி காட்சி அளிக்கின்றன. சேவை நோக்கத்துக்காக கட்டப்பட்ட கட்டடங்கள் வீணாவதை தடுத்து, மக்கள் சேவைக்கு திறந்து விட வேண்டும், என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X