சென்னை:நாகர்கோவில் - கோவை; சென்னை - நியூஜல்பைகுரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
* சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து, புதன்கிழமைகளில், காலை, 10:45க்கு புறப்படும் சிறப்பு ரயில், மூன்றாம் நாள் அதிகாலை, 4:15 மணிக்கு, மேற்கு வங்க மாநிலம், நியூஜல்பைகுரி சென்றடையும்
* நியூ ஜல்பைகுரியில் இருந்து, வெள்ளிக்கிழமைகளில் இரவு, 9:15க்கு புறப்பட்டு, மூன்றாவது நாள் மதியம், 2:10 மணிக்கு, சென்னை சென்ட்ரல் வந்தடையும்.சென்னை சென்ட்ரலில் இருந்து, 16ம் தேதி; நியூ ஜல்பைகுரியில் இருந்து, 18ம் தேதி முதல், இந்த ரயில்களின் போக்குவரத்து துவங்கும்.
*நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு, தினமும் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், நாகர்கோவிலில் இருந்து, தினமும் காலை, 7:35க்கு புறப்பட்டு, இரவு, 8:20 மணிக்கு கோவை சென்றடையும்
*கோவையில் இருந்து, தினமும் காலை, 7:25க்கு புறப்பட்டு, இரவு, 8:10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். நாகர்கோவிலில் இருந்து, 16ம் தேதி முதல்; கோவையில் இருந்து, 17ம் தேதி முதல், இந்த ரயில் போக்குவரத்து துவங்கும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு, நாளை துவங்குகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE