திருப்பூர்:கட்சி துவங்குவது குறித்த ரஜினியின் அறிவிப்பை வரவேற்று, திருப்பூரில் ரசிகர்கள் இனிப்பு வழங்கினர். பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினி, அடுத்த மாதம், அரசியல் கட்சி துவங்கவுள்ளதாகவும், டிச., 31ல் இது குறித்து அறிவிப்பதாகவும் கூறினார். ரஜினியின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில், ரஜினி ரசிகர் மன்றத்தினர், மன்ற அலுவலகம், மாநகராட்சி அலுவலக சந்திப்பு, காலேஜ் ரோடு உட்பட பல இடங்களில், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதேபோல, மாவட்டத்தின் பல இடங்களிலும், ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
நாகூரில் கொட்டும் மழையில்ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்
நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி அறிவிப்பை வரவேற்று அவரது ரசிகர்கள் நாகை அடுத்த நாகூரில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர்.நடிகர் ரஜினிகாந்த், வரும் சட்டசபை தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, ஊழலற்ற, ஆன்மிக அரசியல் உருவாக்க போவது உறுதி என அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து, நாகை மாவட்டம் நாகூரில் ரஜினி மக்கள் மன்றத்தினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கொட்டும் மழையில் நாகூர் தர்கா வாசலில் பட்டாசுகளை வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE