சென்னை:ரஜினி துவக்க உள்ள கட்சியின், தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள, அர்ஜுனமூர்த்தி, 60 புதுக்கோட்டையை சேர்ந்தவர்; தொழில் அதிபர். ஆரம்பத்தில், உணவு பொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டார். அதன்பின், தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான தொழிலில் இறங்கினார்.
மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்கு, தொழில்நுட்ப உதவிகளை வழங்கியுள்ளார். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின், அரசியல் ஆலோசகராக இருந்துள்ளார். அவரது மறைவுக்கு பின், பா.ஜ.,வில் இணைந்தார். தமிழக பா.ஜ., அறிவுசார் பிரிவு தலைவராக இருந்தார்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசனின், மாமா வீட்டில் சம்பந்தம் செய்தவர். இவரது மனைவி, மத்திய அமைச்சர்நிர்மலா சீதாராமனின் பள்ளித்தோழி. பா.ஜ., தலைமையுடன் நெருக்கமாக இருந்து வந்தார். தற்போது, அவர் ரஜினியுடன் இணைந்துள்ளார்.
மாற்று அரசியல்
தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி கூறியதாவது: இது, எனக்கு கிடைத்த மிகப் பெரிய அரிய வாய்ப்பு. இந்த வாய்ப்பை நல்கிய தலைவருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி. இந்த அமைப்பில், எங்களுக்கு உதவிகரமாக, தமிழருவி மணியன் வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
எங்கள் அரசியல் பயணத்தில், மாற்று அரசியல் கொண்டு வர, ஆயத்தமாக உள்ளோம். இந்த மாற்றத்தை, உண்மையான அரசு அமைவதை சந்திக்க போகிறீர்கள். அதற்கான சிந்தனையுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். மக்கள் ஆதரவு தர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE