பொது செய்தி

இந்தியா

80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி

Added : டிச 03, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : நாட்டில் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை, 70 சதவீதத்தில் இருந்து, 80 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, மார்ச் மாதம், அனைத்து விமான சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. கொரோனா பாதிப்புகள் குறைய துவங்கியதும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதன்படி, மே, 25ம் தேதி முதல், உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் துவக்கப்பட்டன.
  80 சதவீத விமானங்களை  இயக்க அரசு அனுமதி

புதுடில்லி : நாட்டில் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை, 70 சதவீதத்தில் இருந்து, 80 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, மார்ச் மாதம், அனைத்து விமான சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. கொரோனா பாதிப்புகள் குறைய துவங்கியதும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதன்படி, மே, 25ம் தேதி முதல், உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் துவக்கப்பட்டன. எனினும், அப்போது, 33 சதவீத விமானங்களை மட்டுமே இயக்க, விமான நிறுவனங்களுக்கு, விமானப் போக்குவரத்துத் துறை, அனுமதி வழங்கியது.


latest tamil news


இதன்பின், படிப்படியாக, விமானங்களின் எண்ணிக்கையை, 70 சதவீதமாக அதிகரிக்க, அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை, மேலும் உயர்த்தி, மத்திய அரசு, வெளியிட்ட அறிவிப்பு
இது குறித்து, விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, நேற்று, 'டுவிட்டர்' வாயிலாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த மே, 25ல், உள்நாட்டு விமானங்களில் பயணிக்க, 30 ஆயிரம் பயணியருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்த எண்ணிக்கை, பின், 2.52 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், நாட்டில் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை, 70 சதவீதத்தில் இருந்து,
80 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mariyappangopinathan - Chennai,இந்தியா
04-டிச-202010:13:14 IST Report Abuse
mariyappangopinathan வடக்கில் உள்ள கொரோனா தெற்கில் கொஞ்சம் நல்லாவே பரப்பிவிட வசதியா இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X